பஞ்சாப் படுகொலைகள், 1991
பஞ்சாப் படுகொலைகள் 1991 Punjab killings | |
---|---|
இடம் | லூதியானா மாவட்டம், பஞ்சாப், இந்தியா |
நாள் | 15 சூன் 1991 |
இறப்பு(கள்) | 80-126 |
பஞ்சாப் படுகொலைகள்,1991 (1991 Punjab killings) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் இரயில் பயணிகள் படுகொலை செய்யப்பட்ட ஒரு நிகழ்வைக் குறிக்கிறது. 1991 ஆம் ஆண்டு சூன் மாதம் 17 ஆம் நாள் நடந்த இந்நிகழ்வில், லூதியானா அருகில் இரண்டு இரயில்களில் பயணம் செய்து கொண்டிருந்த குறைந்தது 80 முதல் 126 பயணிகளைச்[1] சீக்கியத் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
லூதியானா இரயில் நிலையத்திற்கு ஒரு கிலோமீட்டருக்கு முன்பாக தீவிரவாதிகள் இரண்டு இரயில்களிலும் அபாயச் சங்கிலியை இழுத்து இரயில்களை நிறுத்தினர். ஒரு இரயிலில் பெட்டிகளுக்குள் தீயிட்டு 80 பயணிகளை கொலை செய்தனர். பயணம் செய்த இந்துக்களைத் தனியாகப் பிரித்து அவர்களை மட்டும் சுடவேண்டும் என்று கூறியதாக தப்பிப் பிழைத்த பயணிகள் தெரிவித்தனர். தாக்குதல் நிகழ்த்திய தீவிரவாதிகள் இரயில் முழுக்க ஊடுருவி சீக்கியர்களை மட்டும் விட்டுவிட்டு இந்துக்களை அடையாளம் கண்டு சுட்டுக் கொலை செய்தனர். மற்றொரு இரயிலில் பாகுபாடு ஏதுமின்றி தீவிரவாதிகள் அனைவரையும் சுட்டுக் கொலை செய்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பியோடிய பிறகு, இரயில் மீண்டும் பத்துவால் இரயில் நிலையத்திற்கு வந்தது. மருத்துவர்களுடன் மீட்பு குழு அங்கு வந்து சேர்ந்திருந்தது. தப்பிப் பிழைத்தவர்களுக்கு உள்ளூர் கிராம மக்கள் உண்ண உணவும் தண்ணீரும் கொடுத்து உதவினர். மருத்துவர்கள் மருந்தும், மனோதைரியமும் அளித்தனர். ஏப்ரல் மாத நடுவில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பிறகு சூன் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் சுமார் 700 பேர் கொலை செய்யப்பட்டனர்.[2]
இதே ஆண்டின் இறுதியில், 1991 திசம்பர் மாதத்தில் லூதியானாவிலிருந்து பெரோசுபூர் சென்ற இரயிலில் மேலும் 49 பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்தனர்[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sikhs attack India trains, killing 126". Chicago Sun-Times. June 17, 1991 இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 25, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225173517/https://www.questia.com/hbr-welcome.
- ↑ Extremists in India Kill 80 on 2 Trains As Voting Nears End, த நியூயார்க் டைம்ஸ் (June 16, 1991)
- ↑ 49 Slain by Gunmen on Train in India, த நியூயார்க் டைம்ஸ் (December 27, 1991)
இவற்றையும் காண்க
[தொகு].