நேரு அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது | 1990 |
---|---|
அமைவிடம் | கரக்பூர், இந்தியா |
நேரு அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம் (Nehru Museum of Science and Technology) என்பது இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள காரக்பூரில் உள்ள அருங்காட்சியகம் ஆகும். இது 1990-ல் ஹிஜ்லி தடுப்பு முகாம் கட்டிடத்தில் நிறுவப்பட்டது. பின்னர் இந்திய தொழில்நுட்பக் கழகம்-காரக்பூர் பாரம்பரிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இக்கட்டடம் ஹிஜ்லி சகீத் பவன் என்று பெயரிடப்பட்டது. 1930களில் சுதந்திரப் போராட்ட வீரர்களைக் காவலில் வைக்க இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியாளர்களால் பைசண்டைன் கட்டிடக்கலைக்கு ஒத்ததாக இருக்கும் இந்த அற்புதமான கட்டிடம் பயன்படுத்தப்பட்டது.
கட்டிட வரலாறு
[தொகு]அந்த நாட்களில் நாடு முழுவதும் சில தடுப்பு முகாம்கள் இருந்தபோதிலும், சிறை வளாகத்திற்குள் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு கைதிகள் இறந்ததைக் கண்டது ஹிஜ்லி தடுப்பு முகாம் மட்டுமே.[1] இரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பல முக்கிய தேசிய பிரமுகர்கள் தங்கள் கோபத்தைப் பதிவு செய்ய, இந்த சம்பவம் கடுமையான எதிர்ப்பிற்கு வழிவகுத்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த கட்டிடம் முதல் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஆரம்பத்தில் உயர் தொழில்நுட்ப நிறுவனம் என்று அறியப்பட்டது) அமைக்கப் பயன்படுத்தப்பட்டது.
அருங்காட்சியகத்தின் உள்ளடக்கங்கள்
[தொகு]நேரு அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட தொழில்நுட்ப மாதிரிகள் உட்படப் பல உட்புற கண்காட்சிகள் உள்ளன. அருங்காட்சியகத்திற்கு வெளியே உள்ள பூங்காவில் 14 திறந்தவெளி விளக்ககாட்சிகள் மற்றும் போர் விமானம் மற்றும் நீராவி இயந்திரம் உட்பட வெளிப்புற கண்காட்சிகள் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் நிறுவனம் மற்றும் மிட்னாபூர் மாவட்டத்தின் வரலாறு தொடர்பான ஆவணங்களைக் காண்பிக்கும் ஒரு காப்பக அறை உள்ளது.
மேலும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "IIT-Kharagpur remembers its Hijli Jail days". financialexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2 July 2014.