நீசு கவுண்டி
County of Nice | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1388–1848 | |||||||||
தலைநகரம் | நீசு | ||||||||
வரலாறு | |||||||||
• சவோய் உடன் இணைப்பு | 1388 | ||||||||
• பிரான்சியரின் கைப்பற்றல் | 1796 | ||||||||
1814 | |||||||||
• Perfect Fusion | 1848 | ||||||||
பரப்பு | |||||||||
1751 | 4,000 km2 (1,500 sq mi) | ||||||||
மக்கள் தொகை | |||||||||
• 1751 | 250000 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | மாகாணம், பிரான்சு |
நீசு கவுண்டி (County of Nice, நீஸ் கவுண்டி அல்லது நிக்கார்ட் நாடு (Nicard Country, பிரெஞ்சு மொழி: Comté de Nice, இத்தாலியம்: Contea di Nizza/Paese Nizzardo, என்பது பிரான்சின் பிரான்சின் தென்-கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நீசு நகரைச் சுற்றிய ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க பிரதேசம் ஆகும். இது நடுநிலக் கடல், வார் ஆறு, மற்றும் ஆல்ப்சின் தென்முனை ஆகியவற்றுக்கிடையில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]நீசு கவுண்டியில் உரோமர்கள் ஆக்கிரமிக்கும் வரை லிகூரிய இனத்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் அகஸ்டசினால் கைப்பற்றப்பட்டு கிபி 4ம் நூற்றாண்டளவில் குடியேற்றக் காலம் ஆரம்பமாகிய போது, முழுமையாக உரோம மயப்படுத்தப்பட்டனர். இக்காலப் பகுதியில் இப்பகுதி இத்தாலியின் ஒன்பதாம் லிகூரியாவின் ஒரு பகுதியாக இருந்தது.
உரோமை வீழ்ச்சியடைந்ததை அடுத்து பிராங்கியர்கள் இப்பகுதியைக் கைப்பற்றினர். இதனை அடுத்து உள்ளூர் உரோமை மக்கள் புரொவென்சு கவுண்டியில் இணைந்து கொண்டனர். 1108-1176 காலப்பகுதியில் கடல்சார்ந்த குடியரசாகத் தனிப் பகுதியாக இருந்தது. ஆரம்பத்தில் இது புரொவென்சு கவுண்டியினுள் ஒரு சுயாட்சியுடன் கூடிய பகுதியாக இருந்தாலும், 1388 இல் சவோய் சிற்றரசில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. சவோய் சிற்றரசு பின்னர் 1720 இல் சார்தீனியா இராச்சியம் என அழைக்கப்பட்டது.
15 ஆம் நூற்றாண்டில் பீட்மொன்ட் மாநிலத்தினுள் சேர்க்கப்பட்டதை அடுத்து இப்பகுதி நீசு கவுண்டி எனப் பெயர் பெற்றது. இதன் வரலாற்று ரீதியான தலைநகர் நீஸ் ஆகும்.
பிரான்சுடன் இணைப்பு
[தொகு]1858 இல் 3ம் நெப்போலியனுக்கும் சார்தீனியப் பிரதமருக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் படி, ஆஸ்திரியாவுக்கு எதிரான பீட்மொன்டின் போருக்கு பிரான்சு ஆதரவளிப்பதாக உறுதி செய்தது. பதிலாக நீசு, மற்றும் சவோய் கவுண்டிகள் பிரான்சிடம் கையளிக்கப்பட்டன. இவ்விரு கவுண்டிகளும் 1860 மார்ச் 24 இல் பிரான்சுடன் இணைந்தன. இரு கவுண்டிகளிலும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இணைப்பிற்கு ஆதரவாக மக்களும் பெரும்பான்மையாக வாக்களித்தனர். முறைப்படி 1860 சூன் 12 இல் நீசு கவுண்டி பிரான்சுடன் இணைந்தது.
ஆனாலும், இத்தாலியின் தேசியத் தலைவராக கரிபால்டி இவ்விணைப்பை ஆதரிக்கவில்லை. நீசு கவுண்டியில் பிறந்த இவர் தமது பிறந்த நாடு இத்தாலிக்கு சொந்தமானது என வாதிட்டார். இரண்டாம் உலகப் போரின் போது தென்மேற்கு பிரான்சின் சில பகுதிகளை சிறிது காலத்திற்கு இத்தாலி கைப்பற்றியிருந்த போது, நீசு கவுண்டியும் இத்தாலிய இராச்சியத்தின் (1861–1946) கீழ் நிருவகிக்கப்பட்டது.
நீசு கவுண்டியின் மக்கள் நிக்கார்டு மொழியைப் பேசி வந்தனர். ஆனாலும், 1860 இன் பின்னர் இம்மொழி பிரெஞ்சு மொழியினால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்தது. 1999 ஆம் ஆண்டில் இப்பகுதியின் மக்கள் தொகை 506,694 ஆக இருந்தது.
வெளி இணைப்புகள்
[தொகு]- (பிரெஞ்சு) Territorial changes in the history of the County of Nice
- Map of the Kingdom of Sardinia
- Amicucci, Ermanno. Nizza e l’Italia. Mondadori Editore. Milano, 1939.
- Barelli Hervé, Rocca Roger. Histoire de l'identité niçoise, Nice: Serre, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-84410-223-4 பிழையான ISBN
- http://flagspot.net/flags/fr-ctnic.html (flag/history).
- Territorial changes in the history of the County of Nice
- Dances and traditional musics used in the County of Nice