உள்ளடக்கத்துக்குச் செல்

நிக்கோபார் சிறிய ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிகோபார் சிறிய ஆந்தை
உயிரியல் வகைப்பாடு edit
திணை விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை ஸ்டிரிங்கிபார்மிசு
குடும்பம்: ஸிடிரிங்கிடே
பேரினம்: ஓட்டசு
சிற்றினம்:
ஓ. அலியசு
இருசொற் பெயரீடு
ஓட்டசு அலியசு
ராசுமுசுசென், 1998

நிக்கோபார் சிறிய ஆந்தை (Nicobar scops owl)(ஓட்டசு அலியசு) என்பது ஸ்ட்ரிகிடே குடும்பத்தில் ஆந்தை இனமாகும். இது இந்தியாவின்நிக்கோபார் தீவுகளில், குறிப்பாகப் பெரிய நிக்கோபார் தீவுகளில் மட்டுமே காணக்கூடியது. ஆனால் இதனைச் சிறிய நிக்கோபார் தீவிலும் காணலாம்.[1]

நிகோபார் சிறிய ஆந்தியின் இயற்வாழ்விடம் வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும். இதனுடைய காப்பு நிலை நிச்சயமற்றதாக உள்ளது. ஆனால் இது அரிதானது அல்லது ஆபத்தானது என்று கருதப்படுகிறது.[1] இதனை முதலில் பமீலா சி. ராஸ்முசனால் 1998இல்[2] விவரித்தார். இந்த இனம் குறித்த தகவல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இவை சிலந்தி, வண்டு மற்றும் தரைவாழ் பல்லிகளை உணவாக உட்கொள்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பன்னாட்டு பறவை வாழ்க்கை (2019). "Otus alius". IUCN Red List of Threatened Species. 2019: e.T22728447A152511952. Retrieved 14 August 2020.
  2. Rasmussen, Pamela. (1998).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோபார்_சிறிய_ஆந்தை&oldid=3783006" இலிருந்து மீள்விக்கப்பட்டது