உள்ளடக்கத்துக்குச் செல்

தொகைநிலைத் தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொல்லைத் தனிச்சொல் என்றும், தொடர்ச்சொல் என்றும் பகுத்துக்கொள்வது தமிழ் மரபு. [1] தொடர்ச்சொல்லில் தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர் எனக் கொள்ளப்படும் மொழிப் பாங்குகள் உள்ளன. தொல்காப்பியம் தொகைநிலைத் தொடரைத் தொகைமொழி என்று குறிப்பிடுகிறது. [2]

தொகைநிலைத் தொடரானது வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை என ஆறு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறில் உம்மைத்தொகை மட்டும் சில இடங்களில் இருசொல் நடை உடையது.[3] ஏனையவை ஒருசொல் நடை கொண்டவை. [4]

அடிக்குறிப்பு
[தொகு]
  1. பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை
    முதலிய பொருளின் அவற்றின் உருபு இடை
    ஒழிய இரண்டு முதலாத் தொடர்ந்து ஒரு
    மொழிபோல் நடப்பன தொகைநிலைத் தொடர்ச்சொல் (நன்னூல் 361)

  2. வேற்றுமைத் தொகையே, உவமத் தொகையே,
    வினையின் தொகையே, பண்பின் தொகையே,
    உம்மைத் தொகையே, அன்மொழித் தொகை, என்று
    அவ் ஆறு' என்ப,-`தொகைமொழி நிலையே'. (தொல்காப்பியம் 2-412)

  3. 'உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே
    பலர்சொல் நடைத்து' என மொழிமனார் புலவர். (தொல்காப்பியம் 2-421)

  4. எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய (தொல்காப்பியம் 420)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொகைநிலைத்_தொடர்&oldid=4043288" இலிருந்து மீள்விக்கப்பட்டது