உள்ளடக்கத்துக்குச் செல்

வேற்றுமைத்தொகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேற்றுமை உருபுகள் மறைந்து(தொக்கி) வருவது வேற்றுமைத்தொகை ஆகும். வேற்றுமை, பெயர்ச் சொல்லின் பொருளை 'செயப்படுப்பொருள்' முதலாக வேறுபடுத்தும். அவ்வாறு வேறுபடுத்தும் எழுத்து அல்லது சொற்கள், "வேற்றுமை உருபுகள்" என்றழைக்கப்படுகின்றன. இரண்டு சொற்களுக்கிடையே இவ்வுருபுகள் மறைந்து வருவதே 'வேற்றுமைத்தொகை'. எட்டு வேற்றுமைகளில் முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைகளுக்கு உருபு இல்லை வேற்றுமை உருபுகள் 6 ஆகும்.

"உருபும் பயனும் உடன் தொக்க தொகை யும் தொகை மற்றும் தொகா நிலைத்தொடரின் ஒரு அங்கம்" ஆறு வேற்றுமை உருபுகளில் ஏதேனும் ஒரு உருபும்,பயனும் மறைந்து வருவது உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆகும். (எ.கா) பணப்பை= பணத்தைக் கொண்ட பை 'ஐ' எனும் வேற்றுமை உருபும்,'கொண்ட' என்ற பொருளும் தொக்கி(சுருங்கி/மறைந்து) ஒரே சொல்லில் வந்துள்ளது.

வேற்றுமை உருபுகள்

[தொகு]
  1. முதல் வேற்றுமை உருபு = இல்லை (எழுவாய் வேற்றுமை)
  2. இரண்டாம் வேற்றுமை உருபு = 'ஐ'
  3. மூன்றாம் வேற்றுமை உருபு = 'ஆல்'
  4. நான்காம் வேற்றுமை உருபு = 'கு'
  5. ஐந்தாம் வேற்றுமை உருபு = 'இன்'
  6. ஆறாம் வேற்றுமை உருபு = 'அது'
  7. ஏழாம் வேற்றுமை உருபு = 'கண்'
  8. எட்டாம் வேற்றுமை உருபு = இல்லை(விளி வேற்றுமை)

ஆறுவகை வேற்றுமைத்தொகைகள்

[தொகு]

பொருட் புணர்ச்சியின்போது, எப்பொருளைத் தரும் உருபு மறைந்து வருகிறதோ,அப்பொருளின் பெயரால் அத்தொகை பெயர் பெறுகிறது. எழுவாய்க்கும் விளிக்கும் இடையில் நின்ற, இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை முடிய உள்ள ஆறு வேற்றுமைகளுக்குரிய உருபுகளும் வெளிப்படாமல் மறைந்து நிற்கும் தொகை மொழிகள் வேற்றுமைத் தொகை எனப்படும்[2]

  1. பால் பருகினான் -(பால்+ஐ+பருகினான்- ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது)
  2. கை தொழுதான் -(கை+ஆல்+தொழுதான்- ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது)
  3. கூலி வேலை - (கூலி+கு+வேலை- கு என்ற நான்காம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது)
  4. ஊர் நீங்கினான் -(ஊர்+இன்+நீங்கினான்- இன் என்ற ஐந்தாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது)
  5. முருகன் சட்டை -(முருகன்+அது+ சட்டை - அது என்ற ஆறாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது)
  6. குகைப்புலி - (குகை + கண்+ புலி - கண் என்ற ஏழாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது)

மேற்கோள்

[தொகு]
  1. நன்னூல், பொதுவியல், நூற்பா. 362
  2. நன்னூல், தமிழ்நாடு திறந்த நிலைப் பலகலைக்கழகம், இளங்கலைப் பட்டப் பாடநூல்,பக் 272
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேற்றுமைத்தொகை&oldid=3740015" இலிருந்து மீள்விக்கப்பட்டது