தொகாநிலைத் தொடர்
Appearance
சொல்லைத் தனிச்சொல், தொடர்ச்சொல் என இரண்டு வகையாகப் பகுத்துக் காண்பது தமிழ் இலக்கண-நெறி. இவற்றில் தொடர்ச்சொல்லைத் தொகைநிலைத் தொடர் எனவும், தொகாநிலைத் தொடர் எனவும் இரண்டு வகையாகப் பார்க்கின்றனர். [1]
தொகாநிலைத் தொடர்கள்
[தொகு]எண்ணிக்கை | தொடரின் பெயர் | எடுத்துக்காட்டு |
---|---|---|
1 | வினைமுற்றுத் தொடர் | உண்டான் சாத்தன் |
2 | பெயரெச்சத் தொடர் | உண்ட சாத்தன் |
3 | வினையெச்சத் தொடர் | உண்டு சென்றான் |
4 | எழுவாய்த் தொடர் | சாத்தன் வந்தான் |
5 | விளித்தொடர் | சாத்தா வா |
6 | வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் |
குடத்தை வனைந்தான் (இரண்டாம் வேற்றுமை) |
7 | இடைச்சொல் தொடர் | மற்றொன்று |
8 | உரிச்சொல் தொடர் | நனி பேதையே |
9 | அடுக்குத் தொடர் | பாம்பு பாம்பு |
அடிக்குறிப்பு
[தொகு]- ↑
முற்று ஈர் எச்சம் எழுவாய் விளிப்பொருள்
ஆறு உருபு இடை உரி அடுக்கு இவை தொகாநிலை (நன்னுல் 374)