உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய தொலையுணர்வு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய தொலையுணர்வு மையம் (National Remote Sensing Centre) இந்திய விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் ஓர் மையமாகும். இம்மையம் ஐதராபாத் நகரின் தெற்கே 60 கட்டை (கிலோ மீட்டர்) தொலைவில் இயங்கி வருகின்றது.[1] இந்திய தொலையணர்வு செயற்கைக்கோள் கொடுக்கும் தகவல்களை மதிப்பீடு செய்து, பயன்படுத்தும் விதத்தில் மாற்றுவது இதன் பணியாகும். நீர்நிலைத் தகவல்கள், வேளாண்மை, மண் மற்றும் நில மேலாண்மை, தாது பொருட்கள் கண்டறிதல், நிலத்தடி நீர் தகவல்கள், நில அளவிடுதல், கடல் மேலாண்மை மற்றும் மீன் கண்டறிதல், சுற்றுசூழல் நிலை, காடு மற்றும் சார்ந்த தகவல்கள், நகர் திட்டமிடுதல் ஆகிய பணிகளுக்கு தகவல்களை இம் மையம் கொடுக்கின்றது.

நிதி

[தொகு]

தேசிய தொலையுணர்வு மையங்கள் பெரும்பாலும் மாநில மற்றும் மத்திய அரசின் நிதியினால் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால் செயற்கைக்கோள் அனுப்பும் படங்களை விற்பனை செய்வதன் மூலம் வணிகத்தையும் மேற்கொண்டு வருவாய் ஈட்டுகிறது. பல்வேறு அரசு, தனியார் அமைப்புகளுக்கு ஆலோசனையினையும் வழங்குகிறது. தகவல் அறியும் உரிமை எண்: என்.ஆர்.இ.எஸ்.சி / ஆர் / இ / 20/00021, வருவாய் மற்றும் மானிய மதிப்புகள் 2014 முதல் 2019 ஆண்டு வரை வெளியிடப்படுகின்றன.

தேசிய தொலையுணர்வு மையத்தின் ஆண்டு வாரியான வருவாய் விவரம்

எஸ் நிதி ஆண்டு செயற்கைக்கோள் தரவின் மூலம் வருவாய் (ரூபாய் லட்சத்தில்) ஆலோசனை சேவை மூலம் வருவாய்

(லட்சத்தில்)

வழங்கிய நிதி

மாநில மற்றும் மத்திய அரசுகள்

(INR லட்சத்தில்)

1 2014 - 2015 2085.21 670.83 29069.43
2 2015 - 2016 3069.84 191.99 37366.81
3 2016 - 2017 1007.49 838.77 38109.31
4 2017 - 2018 1417.69 1571.75 47271.95
5 2018 - 2019 1643.91 4872.03 49437.40

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Remote Sensing Centre (NRSC) - ISRO". www.isro.gov.in. ISRO. Archived from the original on 26 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 2 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

அதிகாரப்பூர்வ இணையதளம்

[தொகு]

http://www.nrsc.gov.in/aboutus.html பரணிடப்பட்டது 2011-04-30 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_தொலையுணர்வு_மையம்&oldid=3785014" இலிருந்து மீள்விக்கப்பட்டது