துபாய் இஸ்லாமிய வங்கி
வகை | பொது |
---|---|
நிறுவுகை | 1975 |
தலைமையகம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
தொழில்துறை | நிதி சேவை |
உற்பத்திகள் | வங்கி மற்றும் காப்பீடு |
இணையத்தளம் | http://www.dib.ae |
துபாய் இஸ்லாமிய வங்கி (Dubai Islamic Bank (DIB) என்பது துபாயைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய வங்கி ஆகும் இது 1975 இல் துவக்கப்பட்டது. இதுவே முதலில் துவக்கப்பட்ட இஸ்லாமிய வங்கி ஆகும். இதன் அனைத்து நடைமுறைகளும் இஸ்லாமிய கொள்கைகளுடன் இணைக்கப்பட்டது மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் மிகப்பெரிய இஸ்லாமிய வங்கியாகவும் உள்ளது.[1]
து இ வங்கி ஒரு பொது கூட்டுப் பங்கு நிறுவனம் ஆகும், மேலும் இதன் பங்குகள் துபாய் நிதிச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. வங்கி தற்போது எமிரேட்டில் 62 கிளைகளுடன் செயல்படுகிறது. இந்த வங்கியின் இயக்குநர் குழுவின் தலைவராக முகமது அல் ஷெய்பானி உள்ளார். வங்கித் தலைவராக அட்னான் சில்வான் உள்ளார்.
து இ வங்கி பாக்கிஸ்தானில், 62 முக்கிய நகரங்களில் 175 கிளைகளைக் கொண்டு இயங்கிவருகிறது.
நிதித் தகவல்கள்
[தொகு]பார்வை |
2013 | 2012 | 2011 |
---|---|---|---|
மொத்த சொத்துகள் | 30,613,361 | 22,778,319 | 19,587,790 |
பங்குதாரர் ஈக்விட்டி | 2,687,419 | 1,548,180 | 1,473,986 |
NIAT | 461,003 | 234,456 | 159,798 |
ஈவுத்தொகை |
NA | 150,000 | 100,000 |
சொத்து வளர்ச்சி | 34.40% | 16.23% | 27.81% |
ஆதாய வளர்ச்சி | 96.64% | 46.72% | 4.77% |
பாக்கித்தான்
[தொகு]துபாய் இஸ்லாமிய வங்கிக்குச் சொந்தமான வங்கியான துபாய் இஸ்லாமிய வங்கி பாக்கிஸ்தான் லிமிடெட் (DIBPL) என்ற வங்கி பாக்கிஸ்தானை சார்ந்து இயங்கிவரும் வங்கியாகும். மேலும் இந்த இஸ்லாமிய வங்கி நிபுணத்துவம் கொண்ட முன்னணி வங்கிகளில் ஒன்றாக விளங்குகிறது.[2] இந்த வங்கி 2006 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DIB Largest Bank" இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225112607/https://www.dib.ae/islamic-banking/what-is. பார்த்த நாள்: 23 Apr 2015.
- ↑ DUBAI ISLAMIC BANK PAKISTAN LTD