தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை
வகை | Nodal Agency |
---|---|
நிறுவுகை | 18.06.2004 |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | தமிழ்நாடு, இந்தியா |
முதன்மை நபர்கள் | சந்தீப் செக்செனா I.A.S |
தொழில்துறை | வேளாண்மை |
சேவைகள் | வேளாண்மை சந்தைப்படுத்துதல் |
உரிமையாளர்கள் | தமிழக அரசு |
தாய் நிறுவனம் | தமிழக அரசின் வேளாண்மைத் துறை |
இணையத்தளம் | www.tanhoda.gov.in |
தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை (TANHODA-Tamil Nadu Horticulture Development Agency) ஆனது பெரிய அளவில் இந்திய அரசின் நிதிஉதவியுடன் வேளாண்மையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முகமை ஆகும்.[1]
வரலாறு[தொகு]
தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975 இன்படி, இம்முகமை ஒரு சங்கமாக பதிவு செய்யப்பட்டது.[2] இவ்வமைப்பு, அரசாணை எண்-91 (வேளாண்மை)-27.03.2000 இன் கீழ், நடுவண் அரசின் பெரியளவிலான நிதியுதவியுடன் 18.06.2004 அன்று வேளாண்மையின் மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்டது.
அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்[தொகு]
தேசிய தோட்டக்கலை மிசன், சொட்டு நீர்ப்பாசனம், துல்லிய வேளாண்மை, தேசிய மூங்கில் மிசன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் சிறப்பு அமைப்பாக இம்முகமை செயல்படுகிறது.[3]
செயல்கள்[தொகு]
- விவசாயிகள் மற்றும் பணியாளர்களுக்குப் பயிற்சி.
- உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தை புலனாய்வுப் பிரிவு (DEMIC) 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
- வெளியீடுகள்:
தமிழ்நாடு மாநில விவசாய விற்பனை வாரியம் (Tamil Nadu state agricultural Marketing Board) வேளாண்மையின் பல பிரிவுகளில் பயனுள்ள நூல்களை வெளியிட்டது.
- கண்காட்சிகள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Organisations under the Agriculture Department". http://www.tn.gov.in. http://www.tn.gov.in/policynotes/agriculture/tanhoda.pdf. பார்த்த நாள்: 2012-10-30.
- ↑ "Organisations under the Agriculture Department". http://www.tn.gov.in. http://www.tn.gov.in/policynotes/agriculture/tanhoda.pdf. பார்த்த நாள்: 2012-10-30.
- ↑ "Functions And Powers of the Agency". http://www.tn.gov.in. http://www.tn.gov.in/policynotes/agriculture/tanhoda.pdf. பார்த்த நாள்: 2012-10-30.
வெளி இணைப்புகள்[தொகு]
- www.tanhoda.gov.in Official website பரணிடப்பட்டது 2012-06-16 at the வந்தவழி இயந்திரம்