தங்கப் பாலம்
தங்கப் பாலம் நர்மதை பாலம் | |
---|---|
இரயில் பாலத்திலிருந்து தங்கப் பாலம் தோற்றம் | |
ஆள்கூற்று | 21°41′36″N 73°00′18″E / 21.693255°N 73.004936°E |
வாகன வகை/வழிகள் | சாலை |
கடப்பது | நர்மதை ஆறு |
இடம் | பரூச் மற்றும் அங்கலேசுவர், இந்தியா |
Characteristics | |
வடிவமைப்பு | வளைவு பாலம் |
மொத்த நீளம் | 1,412 m (4,633 அடி) |
History | |
கட்டத் தொடங்கிய நாள் | 7 டிசம்பர் 1877 |
கட்டி முடித்த நாள் | 16 மே 1881 |
தங்கப் பாலம் (Golden Bridge) என்பது மேற்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அங்கிலேஷ்வர் மற்றும் பரூச் நகர்களை இணைக்கும் வகையில் 1881 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் பம்பாயில் (இப்போது மும்பை என்று அழைக்கப்படுகிறது) வர்த்தக மற்றும் நிர்வாக ரீதியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்வதற்காக நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் ஆகும்.[1] இந்த பாலம் நர்மதை பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.
கட்டுமானம்
[தொகு]இந்த பாலம் கட்டும் பணியினை 1877ஆம் ஆண்டு டிசம்பர் 7ல் ஆங்கிலேயர்கள் தொடங்கினர். இந்த பாலம் 16 மே 1881 அன்று ரூ .45.65 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, நர்மதை பாலம் என்று அழைக்கப்பட்டது. இப்பாலம் கட்டுவதற்கு அதிக செலவு செய்ததன் காரணமாகத் தங்கப் பாலம் என்று அறியப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, இது தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இருந்தது. இருப்பினும், நர்மதாவில் புதிய பாலம் கட்டப்பட்ட பின்னர் இதன் மீதான போக்குவரத்து நெருக்கம் குறைந்தது. இப்பாலம் இரும்பினால் ஆனது.
தங்க பாலத்தின் நீளம் 1412 மீ.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Golden Bridge stands true to its name now". The Times of India. 12 July 2012. https://timesofindia.indiatimes.com/city/surat/Golden-Bridge-stands-true-to-its-name-now/articleshow/14855904.cms. பார்த்த நாள்: 1 July 2018.
வெளி இணைப்புகள்
[தொகு]- தங்கப் பாலம் at Structurae