தங்கப் பாலம்

ஆள்கூறுகள்: 21°41′36″N 73°00′18″E / 21.693255°N 73.004936°E / 21.693255; 73.004936
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கப் பாலம்
நர்மதை பாலம்
இரயில் பாலத்திலிருந்து தங்கப் பாலம் தோற்றம்
ஆள்கூற்று21°41′36″N 73°00′18″E / 21.693255°N 73.004936°E / 21.693255; 73.004936
வாகன வகை/வழிகள்சாலை
கடப்பதுநர்மதை ஆறு
இடம்பரூச் மற்றும் அங்கலேசுவர், இந்தியா
Characteristics
வடிவமைப்புவளைவு பாலம்
மொத்த நீளம்1,412 m (4,633 அடி)
History
கட்டத் தொடங்கிய நாள்7 டிசம்பர் 1877
கட்டி முடித்த நாள்16 மே 1881
நர்மதா ஆற்றில் தங்கப் பாலம்

தங்கப் பாலம் (Golden Bridge) என்பது மேற்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அங்கிலேஷ்வர் மற்றும் பரூச் நகர்களை இணைக்கும் வகையில் 1881 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் பம்பாயில் (இப்போது மும்பை என்று அழைக்கப்படுகிறது) வர்த்தக மற்றும் நிர்வாக ரீதியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்வதற்காக நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் ஆகும்.[1] இந்த பாலம் நர்மதை பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.

கட்டுமானம்[தொகு]

இந்த பாலம் கட்டும் பணியினை 1877ஆம் ஆண்டு டிசம்பர் 7ல் ஆங்கிலேயர்கள் தொடங்கினர். இந்த பாலம் 16 மே 1881 அன்று ரூ .45.65 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, நர்மதை பாலம் என்று அழைக்கப்பட்டது. இப்பாலம் கட்டுவதற்கு அதிக செலவு செய்ததன் காரணமாகத் தங்கப் பாலம் என்று அறியப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, இது தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இருந்தது. இருப்பினும், நர்மதாவில் புதிய பாலம் கட்டப்பட்ட பின்னர் இதன் மீதான போக்குவரத்து நெருக்கம் குறைந்தது. இப்பாலம் இரும்பினால் ஆனது.

தங்க பாலத்தின் நீளம் 1412 மீ.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கப்_பாலம்&oldid=3060739" இலிருந்து மீள்விக்கப்பட்டது