டோர்டோசா பெருங்கோவில்
Appearance
டோர்டோசா புனித மேரி பெருங்கோவில் | |
---|---|
டோர்டோசாவில் அமைந்துள்ள புனித மேரி பெருங்கோவில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | டோர்டோசா, காத்தலோனியா |
புவியியல் ஆள்கூறுகள் | |
சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
மாவட்டம் | டோர்டோசா |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1447 |
டோர்டோசாவின் புனித மேரி பெருங்கோவில் என்பது எசுப்பானியாவின் காத்தலோனியாவின் டோர்டோசாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவிலாகும். இந்தப் பெருங்கோவிலின் தற்போதைய அமைவிடம் நகரத்தின் பழைய தலைமையிடத்தின் மத்தியில் உள்ளது.
அமைப்பு
[தொகு]இதன் கட்டுமானப் பணிகள் 1347 இல் ஆரம்பமானது. இது பழைய ரோமனெஸ்க் பெருங்கோவிலின் இடிபாடுகளின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெருங்கோவில் கட்டுமானங்கள் இரண்டு நூற்றாண்டுகளின் பின்னரே முடிவடைந்தது. இது பெனிடோ டல்குவரே ஆல் வடிவமைக்கப்பட்டது.[1] இந்தத் தேவாலயம் கோதிக் கட்டடக்கலையின் அமைப்பிலும் பரோக் கட்டடக்கலை அமைப்பிலும் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tortosa Cathedral in Tortosa, Spain: Monuments in Tortosa | Spain.info in English." Tortosa Cathedral in Tortosa, Spain: Monuments in Tortosa | Spain.info in English. N.p., n.d. Web. 12 Feb. 2013.