உள்ளடக்கத்துக்குச் செல்

டேவிட் ராஜு பாலபர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் ராஜு பாலபர்த்தி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
சட்டமன்ற உறுப்பினர் Member
எர்ரகொண்டபாலம் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2014–2019
முன்னையவர்அடிமுலப்பு சுரேஷ்
சட்டமன்ற உறுப்பினர் Member
சந்தனூதலபாடு
பதவியில்
1999–2004
முன்னையவர்தவனம் செஞ்சையா
பின்னவர்தாரா சாம்பையா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 மே 1958
மட்டிகுண்டா, நாகுலுப்பலபாடு, பிரகாசம் மாவட்டம்.
இறப்பு25 ஆகத்து 2024(2024-08-25) (அகவை 66)
குடியுரிமை இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
பெற்றோர்ஜியார்ஜ்
வாழிடம்தேவுடிசெருவு
வேலைஅரசியல்வாதி

டேவிட் ராஜு பாலபர்த்தி (David Raju Palaparthi, 7 மே 1958 – 25 ஆகத்து 2024)[1] ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் எர்ரகொண்டபாலம் சட்டமன்றத் தொகுதியின் பிரதிநிதியாக இருந்தார்.[2] [3] முன்னதாக, சந்தனூதலபாடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]

சொந்த வாழ்க்கை

[தொகு]

இவர் பிரகாசம் மாவட்டத்தின் நாகுலுப்பலபாடு மண்டலத்தின் மட்டிகுண்டா கிராமத்தில் பிறந்தார். ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் முதுகலை மற்றும் இளங்கலை சட்டப் பட்டம் பெற்றார். [5]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இவரது அரசியல் வாழ்க்கை 1987 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் உறுப்பினராகத் தொடங்கியது. பின்னர், மாவட்ட ஊராட்சியின் உறுப்பினரானார். பிறகு, அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 இல், முதல் முறையாக; தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து சந்தனூதலபாடு தொகுதியில் இருந்து ஆந்திர பிரதேச சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [6] பின்னர், 2010ல் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2014 ஆம் ஆண்டில்,எர்ரகொண்டபாலம் தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டப் பேர்வை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [7] ஆனால், 2016ல் தெலுங்கு தேசம் கட்சிக்கு மாறினார் [8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Former Yerragondapalem MLA David Raju Passes Away". Deccan Chronicle. 26 August 2024. https://www.deccanchronicle.com/southern-states/andhra-pradesh/former-yerragondapalem-mla-david-raju-passes-away-1819277. 
  2. "Sitting and previous MLAs from Yerragondapalem (SC) Assembly Constituency".
  3. Statistical Report on General Elections 2014 to Legislative Assembly of Andhra Pradesh (PDF).
  4. Statistical Report of General Elections, 1999 to Legislative Assembly of Andhra Pradesh (PDF).
  5. "YCP & TDP Stance In AP Assembly | MLA David Raju | Part 1 : TV5 News". NTV Telugu. 26 August 2016.
  6. Statistical Report of General Elections, 1999 to Legislative Assembly of Andhra Pradesh (PDF). Election Commission of India. 1999. p. 9.Statistical Report of General Elections, 1999 to Legislative Assembly of Andhra Pradesh (PDF). Election Commission of India. 1999. p. 9.
  7. Statistical Report on General Elections 2014 to Legislative Assembly of Andhra Pradesh (PDF). Election Commission of India. 2014. p. 13.Statistical Report on General Elections 2014 to Legislative Assembly of Andhra Pradesh (PDF). Election Commission of India. 2014. p. 13.
  8. "YSRC MLA from Prakasam District defects to TDP". http://www.thehindu.com/news/national/andhra-pradesh/palaparthi-first-ysrc-mla-to-join-tdp-bandwagon-in-prakasam/article8292283.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_ராஜு_பாலபர்த்தி&oldid=4084828" இலிருந்து மீள்விக்கப்பட்டது