ஜெகதீசு சந்திரா ஜெயின்
ஜெகதீசு சந்திரா ஜெயின் Jagdish Chandra Jain | |
---|---|
1998 ஆம் ஆண்டு அஞ்சல் வில்லையில் | |
பிறப்பு | Basera, உத்தரப் பிரதேசம், இந்தியா | 20 சனவரி 1909
இறப்பு | 28 சூலை 1994 மும்பை, இந்தியா | (அகவை 85)
தேசியம் | இந்தியர் |
கல்வி | குருகுலம், பனாரசு இந்து பல்கலைக்கழகம், சாந்தி நிகேதன், இரவீந்திரநாத் தாகூர் |
அறியப்படுவது | எழுத்தாளர், பேராசிரியர், சிந்தனையாளர், சுதந்திரப் போராட்ட வீரர் இந்திய விடுதலை இயக்கம் |
ஜகதீசு சந்திரா ஜெயின் (Jagdish Chandra Jain 20 ஜனவரி 1909 - 28 ஜூலை 1993) இந்திய விடுதலை இயக்க போராட்ட வீரர், ஓர் அறிஞர், இந்தியவியலாளர், கல்வியாளர், எழுத்தாளர் ஆவார். இவர் சமணத் தத்துவம், பிராகிருத இலக்கியம் மற்றும் குழந்தைகளுக்கான இந்தி பாடப்புத்தகங்கள் உட்பட 80 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை குறித்து அரசாங்கத்தை பலமுறை எச்சரித்தார். இவர் தனது தனிப்பட்ட அனுபவங்களை இரண்டு புத்தகங்களில் விவரித்தார்: ஐ குட் நாட் சேவ் பாபு அண்ட் தெ ஃபர்காட்டன் மகாத்மா (என்னால் பாபு மற்றும் மறக்கப்பட்ட மகாத்மாவை காப்பாற்ற முடியவில்லை). இவர் தனது 84 வது வயதில் ஜூலை 1993 இல் மும்பையில் மாரடைப்பால் இறந்தார்.
ஆரம்பகால குழந்தைப்பருவம்
[தொகு]ஜெகதீசு சந்திரா ஜெயின் [1] 1909 இல் முசாபர்நகரிலிருந்து 12 மைல் தொலைவில் மேற்கு உத்தரபிரதேசத்தின் தோவாப் பகுதியில் அமைந்துள்ள பசேரா என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் படித்த ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்தவர். [2] இவரது தந்தை, ஸ்ரீ காஞ்சிமால் ஜெயின், பாரம்பரிய யுனானி மருந்து விற்பனை செய்யும் ஒரு சிறிய கடை வைத்திருந்தார். ஜெகதீசு சந்திரா இரண்டு சகோதரர்களில் இளையவர் ஆவார். இவரது ஒரு சகோதரன் மற்றும் சகோதரி இளம் வயதிலேயே இறந்தனர். [1]
1911 ஆம் ஆண்டில், ஜெகதீசு சந்திராவுக்கு இரண்டரை வயதாக இருந்தபோது, இவரது தந்தை பிளேக் நோயால் பாதிக்கப்பட்டடு இறந்தார், இவரது தாயார் இரண்டு சிறுவர்களின் ஒரே கவனிப்பாளராக இருந்தார்.[சான்று தேவை] சில ஆண்டுகளுக்குப் பிறகு, காரணமாக இவரது மூத்த சகோதரர் குல்சங்கரி, பெரியம்மை காரணமாக ஒரு கண் பார்வையினை இழந்தார்.ஆறு வயதில், ஜெகதீசு சந்திரா கிராமத்தில் உள்ள பாடசாலா (பள்ளி) க்கு அனுப்பப்பட்டார், அங்கு இவர் ஆரம்ப பள்ளியில் பயின்றார். அது முஸ்லிம் மாணவர்களும் படிக்கும் மிகச் சிறிய பள்ளி. ஒன்பது வயதில், இவர் பாடசாலாவில் தனது படிப்பை முடித்தார், அதன் பிறகு இவரது மூத்த சகோதரர் இவரை குருகுலத்தில் சேர்த்தார். ஆசிரம வாழ்க்கையின் கடுமையான ஒழுக்கம் இவரது அடுத்தடுத்த வாழ்க்கையில் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தியது. [1]
கல்லூரி ஆண்டுகள்
[தொகு]1923 ஆம் ஆண்டில், ஜெகதீசு சந்திரா வாரணாசிக்குச் சென்று சயத்வாத் ஜெயின் மஹாவித்யாலையில் ( கங்கைக் கரையில் அமைந்துள்ளது) சேர்க்கப்பட்டார், அங்கு இவர் சமஸ்கிருதம், சமண மதம், வியாகரன் (இலக்கணம்), சாகித்யம் (இலக்கியம்) மற்றும் நியாயம் (தர்க்கம்) பயின்றார். இங்குதான், தனது சொந்த அனுபவத்தின் மூலம் இவர் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் சிறப்பை உணர்ந்தார். இவர் சாஸ்திரி பட்டம் பெற்றார். பிற்காலத்தில் இவர் ஆயுர்வேதத்தையும் (இந்திய மருத்துவத்தின் பாரம்பரிய அறிவியல்) பயின்றார்.
1929 இல், இவர் கமல்ஸ்ரீயை மணந்தார். உத்தரபிரதேசத்தில் திசாவின் வளமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், இவர் தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையை விட்டுக்கொடுத்து தனது கணவருடன் வாழ்ந்து வந்தார், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஜெகதீசு சந்திரா கைதான போது கமலா ஸ்ரீ சிறு குழந்தைகளைக் கவனித்துக் கொண்டார் [1]
சில வருடங்களுக்குப் பிறகு, ஜெகதீசு சந்திரா, மேற்கு வங்கத்தில் உள்ள ரவிந்திரநாத் தாகூரின் ஆசிரமமாக இருந்த சாந்திநிகேதனில் (அமைதியின் உறைவிடம்) ஆராய்ச்சி அறிஞராகப் பணியாற்ற உதவித்தொகை பெற்றார். ரவீந்திரநாத் தாகூருடனான தனிப்பட்ட தொடர்பின் அனுபவம் இவரது ஆன்மீக வளர்ச்சிக்கும் படைப்பு மனப்பான்மைக்கும் பங்களித்தது.
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Article: Prof. Dr. Jagdish Chandra Jain (1909–1993) – The International scholar and a Freedom Fighter, by Kalpana Jain Sharma.
- ↑ "Dr. Jagdish Chandra Jain". www.istampgallery.com. பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.