சோயா வண்ணப்பூச்சு
சோயா வண்ணப்பூச்சு (Soy paint) என்பது சோயாவிலிருந்து பெறப்படும் வண்ணப்பூச்சு ஆகும். இதன் மூலப்பொருளாக சோயா அவரை முதன்மையாக உள்ளது. இது புதுப்பிக்கத்தக்கத் திறன் மற்றும் நச்சுத்தன்மை இல்லாததால் நம்பகத்தன்மை கொண்ட தயாரிப்பாக உள்ளது.
எண்ணெய்
[தொகு]சோயா எண்ணெய் வண்ணப்பூச்சு தயாரிக்க 1900களிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 1914 மற்றும் 1918 இடையே சந்தையில் இரண்டாவது இடத்தினை சோயா எண்ணெய் வகித்தது.[1] சோயா எண்ணெய் வண்ணப்பூச்சு தயாரிப்புகளில் ஆளி விதையின் மாற்றாக ஆரம்பக்கால காலத்திலிருந்தபொழுதிலும் முழுமையாகப் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.[2] 1933ஆம் ஆண்டில் ராபர்ட் போயர் போர்ட் தானுந்து நிறுவன தானுந்திகளில் பயன்படுத்தப்படும் ஒரு எனாமல் சோயா வண்ணப்பூச்சினை உருவாக்கினார்.[1][3] சோயா எண்ணெய் இதன் சிறந்த உலரும் தன்மை காரணமாக உற்பத்தியாளர்களைக் கவர்ந்தது.[4]
மரப்பால்
[தொகு]சோயா மாவு அல்லது புரதம் கேசீனுக்கு மாற்றாக மரப்பால் வகை (நீர் சார்ந்த) வண்ணப்பூச்சுகளில் பயன்படுத்தப்படுகிறது. சில உற்பத்தியாளர்கள் குறைந்தளவு ஆவியாகும் தன்மை மற்றும் பொதுவான பசுமைக் கட்டிடப் பண்பு காரணமாக சோயா வண்ணப்பூச்சுகளில் தங்களுடைய கட்டிடங்களைப் புதுப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.[5] விற்பனையாளர்களும் சோயா வண்ணப்பூச்சினை விற்க ஆர்வம் காட்டுகின்றனர்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Riegel; Emil Raymond Riegel; James Albert Kent (2003). Riegel's handbook of industrial chemistry. Springer. p. 316. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-306-47411-5.
- ↑ U.S.G.P.O. (1918). Yearbook of the United States Department of Agriculture. University of Virginia: U.S. G. P. O. p. 105.
- ↑ Schwarcz (2004). The Fly in the Ointment: 70 Fascinating Commentaries on the Science of Everyday Life Canadian electronic library. ECW Press. p. 193. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55022-621-5.
- ↑ Maine (1915). Annual report. University of Michigan: Maine Agricultural Experiment Station. p. 32.
- ↑ Biobased (July 2007). "Need Soy Paint? Ask Sherwin-Williams" (PDF). Biobased Solutions. Archived from the original (PDF) on 28 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 16 November 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Durasoy (2009). "Durasoy One" (PDF). Product Data Sheet. Archived from the original (PDF) on 2012-03-01. பார்க்கப்பட்ட நாள் November 2009.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)