சுனில் குமார் மகதோ
சுனில் குமார் மகதோ | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | ஜம்ஷேத்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வில் சோட்டா கம்காரியா, சராய்கேலா கர்சாவான் மாவட்டம், | 11 சனவரி 1966
இறப்பு | 4 மார்ச்சு 2007 ஜம்சேத்பூர் | (அகவை 41)
அரசியல் கட்சி | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா |
துணைவர் | சுமன் மகதோ |
பிள்ளைகள் | 1 மகள் |
வாழிடம்(s) | சராய்கேலா கர்சாவான் மாவட்டம், சார்க்கண்டு |
As of 28 மே, 2017 |
சுனில் குமார் மகதோ (Sunil Kumar Mahato)(11 ஜனவரி 1966 – 4 மார்ச் 2007) இந்தியாவின் 14வது மக்களவை உறுப்பினராக இருந்தார், கிழக்கு மாநிலமான சார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) அரசியல் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். இவர் கம்யூனிச சித்தாந்தத்திற்கு துணையாக இருந்த நக்சலைட் கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
தொடக்க கால வாழ்க்கை
[தொகு]மகதோ குட்மி குடும்பத்தைச் சேர்ந்தவர். 2003 ஆம் ஆண்டில், ஜார்கண்ட் ஆளுநரைச் சந்தித்த ஒரு குழுவில் இவர் ஒரு அட்டவணைப் பழங்குடியினராக அங்கீகாரம் கோரினார்.[1]
அரசியல் வாழ்க்கை
[தொகு]இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் ஆவார். இவர் 2004 இந்தியப் பொதுத் தேர்தலில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இவரோடு போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் அபா மஹதோ இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[2] மார்ச் 4, 2007 அன்று, கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள காட்சிலா அருகே, இந்து பண்டிகையான ஹோலியைக் குறிக்க ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளூர் கால்பந்து போட்டியில் கலந்துகொண்டபோது கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் காட்சிலா தொகுதி செயலாளர் பிரபாகர் மகதோ மற்றும் இரண்டு [3] அல்லது நான்கு [2] சுனில் மகதோவின் மெய்க்காவலர்களையும் கொன்றனர். மூன்று பெண்கள் உட்பட தோராயமாக 30 பேர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Arun Kumar Thakur (14 August 2003). "Kurmis in tribal status cry". The Telegraph (Kolkata). https://www.telegraphindia.com/1030814/asp/jharkhand/story_2261810.asp.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 "Sunil Mahto murder case: Police to take naxal leader Ranjit Pal into remand". The Avenue Mail. 29 January 2017. http://www.avenuemail.in/jamshedpur/sunil-mahto-murder-case-police-take-naxal-leader-ranjit-pal-remand/103799/.
- ↑ "JMM MP Mahato shot dead by naxals". The Hindu. 5 March 2007. http://www.thehindu.com/todays-paper/JMM-MP-Mahato-shot-dead-by-naxals/article14729462.ece.
- ↑ "Maoists in Holi mask murder MP". The Telegraph (Kolkata). 5 March 2007. https://www.telegraphindia.com/1070305/asp/frontpage/story_7470315.asp.