சிவன் (ஒளிப்பதிவாளர்)
சிவன் Sivan | |
---|---|
பிறப்பு | சிவசங்கரன் நாயர் 14 மே 1932 ஹரிப்பாடு, திருவிதாங்கூர் (தற்போது ஆலப்புழா மாவட்டம், கேரளம், இந்தியா) |
இறப்பு | 24 சூன் 2021 (aged 89) திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
பணி |
|
அறியப்படுவது |
|
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | சந்திராமணி |
பிள்ளைகள் |
சிவன் என்று பிரபலமாக அறியப்பட்ட சிவசங்கரன் நாயர் (Sivasankaran Nair, (14 மே 1932 – 24 சூன் 2021) மலையாளத் திரைப்படத்துறையில் தனது படைப்புகளுக்காக அறியப்பட்ட இந்திய ஒளிப்பதிவாளரும் திரைப்பட இயக்குநருமாவார். சிவன் மூன்று தடவைகள் தேசிய திரைப்பட விருதை வென்றார்.[1][2][3] திருவிதாங்கூரிலும் திருச்சியிலும் முதல் அரசு பத்திரிகைப் புகைப்படக் கலைஞராக இருந்தார்.[4] இவர் சங்கீத் சிவன், சந்தோஷ் சிவன், சஞ்சீவ் சிவன் ஆகியோரின் தந்தை ஆவார்.
தேசிய விருது பெற்ற மலையாளத் திரைப்படமான செம்மீன் திரைப்படத்தின் நிலையான புகைப்படக் கலைஞராக சிவன் இருந்தார்.[5]
1972 இல் சுவப்ணம் என்ற திரைப்படத்தை இயக்கி அறிமுகமானார்.[6] இவரது பிரபலமான திரைப்படங்களில் சில அபயம் (1991) யாகம் (1982) ஒரு யத்ரா (1999) கேசு (2009) கொச்சு கொச்சு மோகங்கள் (1998) கிளிவத்தில் (2008) ஆகியவையாகும்.[7]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த பதேட்டத்தில் கோபாலப்பிள்ளை, பவானியம்மா ஆகியோரின் இரண்டாவது குழந்தை சிவன். அவர்களின் ஆறு குழந்தைகளில் இவர் இரண்டாவது குழந்தையாவார். இவரது முழு பெயர் சிவசங்கரன் நாயர்.[8]
இறப்பு
[தொகு]சிவன் 2021 சூன் 24 அன்று தனது 89-ஆவது வயதில் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார்.[9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Janani K. (June 24, 2021). "Cinematographer-director Sivan dies of cardiac arrest at 89 in Thiruvananthapuram". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ Aswin J. Kumar (24 Jun 2021). "Cinematographer, director Sivan dies of cardiac arrest | Thiruvananthapuram News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "പ്രശസ്ത ഫോട്ടോഗ്രാഫര് ശിവന് അന്തരിച്ചു". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Well Known Photographer Sivan Passes Away". Deshabhimani (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Well Known Photographer Sivan Passes Away". Deshabhimani (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "പ്രശസ്ത ഫോട്ടോഗ്രാഫർ ശിവൻ അന്തരിച്ചു". Asianet News Network Pvt Ltd (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ Aswin J. Kumar (24 Jun 2021). "Cinematographer, director Sivan dies of cardiac arrest | Thiruvananthapuram News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "പ്രശസ്ത ഫോട്ടോഗ്രാഫർ ശിവൻ അന്തരിച്ചു". Asianet News Network Pvt Ltd (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Veteran cinematographer, director Sivan passes away". https://www.onmanorama.com/news/kerala/2021/06/24/cinematographer-director-sivan-passes-away-santosh-sivan-father.html.
- ↑ Pudipeddi, Haricharan (24 June 2021). "Malayalam cinematographer-director Sivan dies of cardiac arrest". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 November 2023.