உள்ளடக்கத்துக்குச் செல்

சிவன் (ஒளிப்பதிவாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவன்
Sivan
பிறப்புசிவசங்கரன் நாயர்
14 மே 1932
ஹரிப்பாடு, திருவிதாங்கூர் (தற்போது ஆலப்புழா மாவட்டம், கேரளம், இந்தியா)
இறப்பு24 சூன் 2021 (aged 89)
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
பணி
  • ஒளிப்பதிவாளர்
  • இயக்குநர்
அறியப்படுவது
  • யாகம் (1982)
  • அபயம் (1991)
  • கொச்சு கொச்சு மோகங்கள் (1998)
  • ஒரு யாத்ரா (1999)
  • கிளிவத்தில் (2008)
  • கேசு (2009)
பெற்றோர்
  • கோபாலபிள்ளை (தந்தை)
  • பவானியம்மா (தாய்)
வாழ்க்கைத்
துணை
சந்திராமணி
பிள்ளைகள்

சிவன் என்று பிரபலமாக அறியப்பட்ட சிவசங்கரன் நாயர் (Sivasankaran Nair, (14 மே 1932 – 24 சூன் 2021) மலையாளத் திரைப்படத்துறையில் தனது படைப்புகளுக்காக அறியப்பட்ட இந்திய ஒளிப்பதிவாளரும் திரைப்பட இயக்குநருமாவார். சிவன் மூன்று தடவைகள் தேசிய திரைப்பட விருதை வென்றார்.[1][2][3] திருவிதாங்கூரிலும் திருச்சியிலும் முதல் அரசு பத்திரிகைப் புகைப்படக் கலைஞராக இருந்தார்.[4] இவர் சங்கீத் சிவன், சந்தோஷ் சிவன், சஞ்சீவ் சிவன் ஆகியோரின் தந்தை ஆவார்.

தேசிய விருது பெற்ற மலையாளத் திரைப்படமான செம்மீன் திரைப்படத்தின் நிலையான புகைப்படக் கலைஞராக சிவன் இருந்தார்.[5]

1972 இல் சுவப்ணம் என்ற திரைப்படத்தை இயக்கி அறிமுகமானார்.[6] இவரது பிரபலமான திரைப்படங்களில் சில அபயம் (1991) யாகம் (1982) ஒரு யத்ரா (1999) கேசு (2009) கொச்சு கொச்சு மோகங்கள் (1998) கிளிவத்தில் (2008) ஆகியவையாகும்.[7]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த பதேட்டத்தில் கோபாலப்பிள்ளை, பவானியம்மா ஆகியோரின் இரண்டாவது குழந்தை சிவன். அவர்களின் ஆறு குழந்தைகளில் இவர் இரண்டாவது குழந்தையாவார். இவரது முழு பெயர் சிவசங்கரன் நாயர்.[8]

இறப்பு[தொகு]

சிவன் 2021 சூன் 24 அன்று தனது 89-ஆவது வயதில் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார்.[9][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Janani K. (June 24, 2021). "Cinematographer-director Sivan dies of cardiac arrest at 89 in Thiruvananthapuram". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. Aswin J. Kumar (24 Jun 2021). "Cinematographer, director Sivan dies of cardiac arrest | Thiruvananthapuram News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  3. "പ്രശസ്ത ഫോട്ടോഗ്രാഫര്‍ ശിവന്‍ അന്തരിച്ചു". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  4. "Well Known Photographer Sivan Passes Away". Deshabhimani (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  5. "Well Known Photographer Sivan Passes Away". Deshabhimani (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  6. "പ്രശസ്ത ഫോട്ടോഗ്രാഫർ ശിവൻ അന്തരിച്ചു". Asianet News Network Pvt Ltd (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  7. Aswin J. Kumar (24 Jun 2021). "Cinematographer, director Sivan dies of cardiac arrest | Thiruvananthapuram News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  8. "പ്രശസ്ത ഫോട്ടോഗ്രാഫർ ശിവൻ അന്തരിച്ചു". Asianet News Network Pvt Ltd (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  9. "Veteran cinematographer, director Sivan passes away". https://www.onmanorama.com/news/kerala/2021/06/24/cinematographer-director-sivan-passes-away-santosh-sivan-father.html. 
  10. Pudipeddi, Haricharan (24 June 2021). "Malayalam cinematographer-director Sivan dies of cardiac arrest". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 November 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவன்_(ஒளிப்பதிவாளர்)&oldid=3961385" இலிருந்து மீள்விக்கப்பட்டது