திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: hi:त्रयम्बकेश्वर मन्दिर
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: hi:त्र्यम्बकेश्वर मन्दिर
வரிசை 11: வரிசை 11:
[[en:Trimbakeshwar Shiva Temple]]
[[en:Trimbakeshwar Shiva Temple]]
[[es:Trimbakeshwar]]
[[es:Trimbakeshwar]]
[[hi:त्रयम्बकेश्वर मन्दिर]]
[[hi:त्र्यम्बकेश्वर मन्दिर]]
[[kn:ತ್ರ್ಯಂಬಕೇಶ್ವರ]]
[[kn:ತ್ರ್ಯಂಬಕೇಶ್ವರ]]
[[mr:त्र्यंबकेश्वर]]
[[mr:त्र्यंबकेश्वर]]

14:34, 31 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக்

திரிம்பகேஸ்வரர் கோயில், திரிம்பாக் திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான இந்துக் கோயில் ஆகும். இது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்ட இக் கோயில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

இது குடாநாட்டு இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது.


இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக் கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது.