பொதக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 101: வரிசை 101:


== கடந்தகால நிகழ்வுகள் ஓர் பார்வை ==
== கடந்தகால நிகழ்வுகள் ஓர் பார்வை ==

புதுமனைவாழ் பொதுமக்களின் வசதிக்காக, மா பங்கு கமிட்டியின் செலவில் முஹம்மதியாஹ் தெருவிற்கும், ஷௌகத் அலீ தெருவிற்குமிடையே புதியதாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணித்து, அதை கடந்த 30.09.2010 வெள்ளிக்கிழமை அன்று, ஊர் பெரியோர்கள் முன்னிலையில் ஹாஜி K.M. அப்துல் கஃபூர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


இவ்வூர் பொதுமக்கள் அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மன்னார்குடி TO பொதக்குடி பேருந்து (B.S. மணியம் டிரான்ஸ்போர்ட்) மேற்படி வழித்தடத்தில் 17.4.1972 முதல், பொதுநல ஆர்வலர் திருவாளர் T.P.M. அப்துல் ஸத்தார் அவர்களுடைய பெருமுயற்சியால் இயங்கத்துவங்கியது.
இவ்வூர் பொதுமக்கள் அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மன்னார்குடி TO பொதக்குடி பேருந்து (B.S. மணியம் டிரான்ஸ்போர்ட்) மேற்படி வழித்தடத்தில் 17.4.1972 முதல், பொதுநல ஆர்வலர் திருவாளர் T.P.M. அப்துல் ஸத்தார் அவர்களுடைய பெருமுயற்சியால் இயங்கத்துவங்கியது.

08:44, 5 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

பொதக்குடி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
வட்டம் நீடாமங்கலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
ஊராட்சி மன்ற தலைவர் சி.அ.ஷே. ஹாஜா நஜ்முத்தீன்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 2 சதுர கிலோமீட்டர்கள் (0.77 sq mi)
குறியீடுகள்

பொதக்குடி (ஆங்கிலம்: Podakkudi) தமி்ழகத்திலுள்ள திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். திருவாரூரிலிருந்து 20 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது. இவ்வூரின் இரு ஓரத்திலும் வெண்ணாறு மற்றும் வெட்டாறு பாய்ந்தோடுகிறது. இது, இப்பகுதி மக்கள் வேளாண்மை செய்வதற்கு பெரிதும் உதவுகிறது. இக்கிராமத்திற்கு அருகே கூத்தாநல்லூர் எனும் நகரம் அமையப்பெற்றிருக்கிறது.

இவ்வூரில் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக, அந்நூருல் முஹம்மதிய்யு எனும் பெயரில் அரபிக் கல்லூரி ஒன்று இயங்கி வருகின்றது; இங்கு இசுலாமிய (ஷரீஅத்) சட்டம் குறித்தும், இசுலாமிய மார்க்கம் குறித்தும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் வெளியூர்களிலிருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும், இலங்கையிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து, ஏழாண்டுகள்வரை தங்கியிருந்து கல்வி பயின்று, பட்டயம் (ஸனது) பெற்றுச் செல்கின்றனர்.

கல்வி நிறுவனங்கள்

அரசு கல்வி கலாசாலைகள்

  • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (நூரியாஹ் தெரு, பொதக்குடி)
  • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி (முஹம்மது அலீ தெரு, அகர பொதக்குடி)
  • அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளி (காந்தி தெரு, பொதக்குடி)
  • அரசு இருபாலர் மழலையர் பள்ளி (பிரதான சாலை, பொதக்குடி)
  • அரசு இருபாலர் தொடக்கப் பள்ளி (முஹம்மது அலீ தெரு, அகர பொதக்குடி)

தனியார் கல்வி நிறுவனங்கள்

  • எ.என்.எ. மெட்ரிகுலேஷன் பள்ளி (காயிதே மில்லத் தெரு, அகர பொதக்குடி)
  • இந்தோ-பிரிட்டீஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி (பிரதான சாலை, பொதக்குடி)
  • நவபாரத் மழலையர் பள்ளி (ஹாஜியார் தெரு, பொதக்குடி)
  • வி.ஆர்.என். மயிலாம்பாள் நினைவு மழலையர் பள்ளி (ஷௌகத் அலீ தெரு, பொதக்குடி)

தெருக்களின் பெயர் பட்டியல்

தற்போது வழக்கத்திலுள்ள பெயருக்கு அருகில் தெருவின் பழைய பெயர் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.

  • செய்யது ஆஸிம் தெரு
  • கமாலியாஹ் தெரு (புதிய அக்ரஹாரம்)
  • முஹம்மது அலீ தெரு (பழைய அக்ரஹாரம்)
  • புதுத்தெரு (பிள்ளை வீட்டுத்தெரு)
  • ஜின்னாஹ் தெரு (தச்சன் தெரு)
  • ஹாஜியார் தெரு
  • அபுல் கலாம் ஆஸாத் தெரு
  • டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் தெரு
  • அப்துல்லாஹ் தெரு
  • மதீனா தெரு
  • அப்துல் ஸத்தார் தெரு
  • அக்பர் தெரு
  • அபூஹுரைராஹ் தெரு

  • கறீமியாஹ் தெரு
  • நூரியாஹ் தெரு
  • கறீமியாஹ் லேன்
  • நூரியாஹ் லேன்
  • அஹமதியாஹ் தெரு
  • ஷௌகத் அலீ தெரு
  • பதுரியாஹ் தெரு
  • ஜிந்தாமதார் தெரு
  • காதிரியாஹ் தெரு
  • ஜாவியா தெரு
  • மூன்றாம் தெரு
  • நான்காம் தெரு
  • ஐந்தாம் தெரு

  • ஆறாம் தெரு
  • ஷரீஃப் தெரு
  • ஜலால் தெரு
  • காந்தி தெரு
  • சற்குரு தெரு
  • ஸத்தாம் ஹுஸைன் தெரு
  • மைதீன் தெரு
  • தெற்கு தெரு
  • ஆலிம்ஷா தெரு
  • மேலத்தெரு
  • கீழத்தெரு
  • வடக்குத்தெரு
  • ஜ‌மாலியாஹ் தெரு

கடந்தகால நிகழ்வுகள் ஓர் பார்வை

புதுமனைவாழ் பொதுமக்களின் வசதிக்காக, மா பங்கு கமிட்டியின் செலவில் முஹம்மதியாஹ் தெருவிற்கும், ஷௌகத் அலீ தெருவிற்குமிடையே புதியதாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணித்து, அதை கடந்த 30.09.2010 வெள்ளிக்கிழமை அன்று, ஊர் பெரியோர்கள் முன்னிலையில் ஹாஜி K.M. அப்துல் கஃபூர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இவ்வூர் பொதுமக்கள் அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மன்னார்குடி TO பொதக்குடி பேருந்து (B.S. மணியம் டிரான்ஸ்போர்ட்) மேற்படி வழித்தடத்தில் 17.4.1972 முதல், பொதுநல ஆர்வலர் திருவாளர் T.P.M. அப்துல் ஸத்தார் அவர்களுடைய பெருமுயற்சியால் இயங்கத்துவங்கியது.

பொதக்குடி அரசு மருத்துவமனை 31.12.1967 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணியளவில் ஹாஜி ம.மு. முஹம்மது யூஸுஃப் அவர்கள் தலைமையில் மாண்புமிகு S.J. ஸாதிக் பாட்ஷா (B.Sc., B.L.) தமிழக சுகாதார அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பொதக்குடி உயர்நிலைப்பள்ளி 14.7.1962 சனிக்கிழமை காலை 9:30 மணியளவில் உயர்திரு T.S. சுவாமிநாத உடையார் (தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள் தலைமையில் மாண்புமிகு M. பக்தவத்சலம் (B.A., B.L.) மாநில கல்வி மற்றும் நிதி அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இவ்வூரின் அரபுக்கல்லூரியுடன் இணைந்திருருக்கும் மேலப்பள்ளிவாசலின் பழைய கட்டிடம் 10.7.1914 வெள்ளிக்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டது. (கடந்த 1999ஆம் ஆண்டு இப்பள்ளிவாசலை இடித்துவிட்டு, மீண்டும் புதிய பிரம்மாண்டமான பள்ளிவாசல் ஒன்றை கட்டி 2001ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.)

ஆதார நூல்கள்

  1. திருவாரூர் மாவட்ட ஊர்ப் பெயர்கள்
  2. இஸ்லாமிய கலைகளஞ்சியம்
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதக்குடி&oldid=606127" இலிருந்து மீள்விக்கப்பட்டது