உலகத் தமிழ்ச் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 41: வரிசை 41:


==சங்க அமைப்பு==
==சங்க அமைப்பு==
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா உத்தரவுப்படி மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் நிர்வாக உறுப்பினராகவும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் நிதிக்கட்டுப்பாட்டு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இச்சங்கத்தின் நிர்வாகப் பணிகளுக்காக தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா உத்தரவுப்படி [[மதுரை]]யில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் நிர்வாக உறுப்பினராகவும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் நிதிக்கட்டுப்பாட்டு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இச்சங்கத்தின் நிர்வாகப் பணிகளுக்காக தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.


==பணிகள்==
==பணிகள்==

15:43, 3 மே 2021 இல் நிலவும் திருத்தம்

உலகத் தமிழ்ச் சங்க வளாகம், மதுரை

உலகத் தமிழ்ச் சங்கம் என்பது தமிழ் மொழி வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் தமிழ்நாடு அரசால் மதுரையில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு அரசு நிறுவனமாகும். இவ்வளாகத்தை தமிழக முதல்வர் 1 மார்ச் 2016 அன்று காணொளிக் காட்சி வாயிலாக சென்னையிலிருந்தவாரே திறந்து வைத்தார். [1]

பன்னாட்டு அளவிலான கருந்தரங்க கூடங்கள், ஆய்வரங்கம், நுாலகம், பார்வையாளர் அரங்கம் இதில் இடம் பெற்றுள்ளன. இவ்வளாகச் சுற்றுச் சுவர்களில் 1330 திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ளது.[2]

காந்தி அருங்காட்சியகம் எதிரே செயல்படும் பழந்தமிழர் பெருமைகளை விளக்கும் சங்கத் தமிழ் காட்சிக் கூடம் இவ்வமைப்பின் ஓர் அலகாக செயல்படுகிறது.

அமைவிடம்

மதுரை தல்லாகுளம் பகுதியில் காந்தி அருங்காட்சியக சாலையில் மதுரை சட்டக் கல்லூரியை அடுத்து 87 ஆயிரம் சதுர அடியில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ளது.

வரலாறு

தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடத்தப் பெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரன் மதுரையில் உலகத் தமிழ் சங்கம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து 1982 ஆம் ஆண்டில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைப்பதற்கான அரசு ஆணை வெளியிடப் பெற்று, உலகத் தமிழ்ச் சங்க அலுவலகக் கட்டிடங்கள் கட்டுவதற்காக மதுரையில் 14.5 ஏக்கர் நிலமும் பெறப்பட்டது. பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, மதுரையில் உலகத் தமிழ்ச் சங்க அமைப்பிற்கான பணியினைச் செயற்படுத்திட அறிவிப்பு வெளியிட்டதுடன், உலகத் தமிழ்ச் சங்க அலுவலகக் கட்டுமானப் பணிகள் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கச் செயற்பாடுகள் போன்றவைகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டார்.



நோக்கங்கள்

  • உலக நாடுகளில் இயங்கி வரும் அனைத்துத் தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள், தமிழ் ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஆகியவை பற்றிய விவரங்களைத் தொகுத்தல்.
  • உலகமெங்கும் இயங்கிவரும் இவ்வமைப்புகளை ஒரு குடையின்கீழ் பதிவு செய்து ஒருங்கிணைத்துக் கூட்டமைப்பு உருவாக்குதல்.
  • தமிழறிஞர்கள், கலைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பித் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிப் பரப்புதல்.
  • தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் அயல் நாடுகளுக்கு ஆய்வாளர்கள் அனுப்பித் தமிழர் நிலையினை ஆய்தல், அந்நாட்டு ஆய்வாளர்களைத் தமிழகத்திற்கு வரவழைத்துக் கருத்துப் பரிமாறுதல்.
  • பிறநாட்டுத் தமிழர் களஞ்சியம் தயாரித்தல்.
  • தமிழ் மொழியிலுள்ள சங்க கால நூல்கள், இலக்கியங்கள் போன்றவற்றை அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் அறிந்து தெளிய வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.
  • உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கைகள் எடுத்தல்.
  • உலக நாடுகளில் தமிழர்கள் வாழும் இரு நாடுகளைத் தேர்வு செய்து ஒவ்வோர் ஆண்டும் ஆய்வரங்கங்கள், கருத்தரங்கங்கள் நடத்துதல்.
  • கலைநுட்பம் வாய்ந்த சிற்பங்கள், நாட்டுப்புறப்பாடல்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் கண்டு பாராட்ட வாய்ப்பு ஏற்படுத்துதல்.
  • உலக நாடுகளின் அருங்காட்சியகங்களில் இடம் பெற்றுள்ள தமிழ் தொடர்பான ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச்சுவடிகள், அரிய கலைப் பொருட்கள் முதலிய தரவுகளைத் திரட்டுதல்.[3]

சங்க அமைப்பு

முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா உத்தரவுப்படி மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் நிர்வாக உறுப்பினராகவும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் நிதிக்கட்டுப்பாட்டு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இச்சங்கத்தின் நிர்வாகப் பணிகளுக்காக தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

பணிகள்

இந்த உலகத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் உலகிலுள்ள தமிழ் சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இச்சங்கத்தில் தமிழ் தொடர்பான 30 துறைகள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஒரு அலகாக சங்கத் தமிழ் காட்சிக் கூடம் இதனருகே காந்தி அருங்காட்சியகம் எதிரில் செயல்படுகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Ulaga Tamil Sangam -The Hindu
  2. http://www.dinamalar.com/news_detail.asp?id=1452432
  3. http://utsmdu.org/about/

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகத்_தமிழ்ச்_சங்கம்&oldid=3141433" இலிருந்து மீள்விக்கப்பட்டது