நகரா (இசைக்கருவி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎வெளி இணைப்புகள்: added archive url in place of broken url
வரிசை 9: வரிசை 9:
* [http://chandrakantha.com/articles/indian_music/nagada.html நகரா நிகழ்படம்]
* [http://chandrakantha.com/articles/indian_music/nagada.html நகரா நிகழ்படம்]
* [http://nithyavani.blogspot.in/2011/05/blog-post.html ஐந்து வகைக் கருவிகள்]
* [http://nithyavani.blogspot.in/2011/05/blog-post.html ஐந்து வகைக் கருவிகள்]
* [http://www.4to40.com/music/article.asp?p=Musical_Instruments_of_Rajasthan&city=Jaipur இராச்சசுத்தான் இசைக்கருவிகள்]
* [http://archive.is/bJX58 இராச்சசுத்தான் இசைக்கருவிகள்]


[[பகுப்பு:தாள இசைக்கருவிகள்]]
[[பகுப்பு:தாள இசைக்கருவிகள்]]

10:16, 5 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

நகரா என்பது ஒரு தோல் இசைக்கருவியாகும். மிகப்பெரிய வடிவம் கொண்ட இந்த இசைக்கருவி பெரும்பாலும் கோவில்களில் நுழைவாயில் அருகே இடம்பெற்றிருக்கும்.

கோவில் இசைக்கருவி

நகரா முரசு மண்டபம், மதுரை

நித்ய பூசை நடைபெறும் காலங்கள், சிறப்பு அபிசேக ஆராதனைகள், பண்டிகைகள், கோவில் விழாக்கள், சாமி அல்லது அம்மன் ஊர்வலம் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது நகரா என்ற இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது. பெரும்பாலும் கோவில் ஊழியர்களே இக்கருவியினை இசைக்கிறார்கள். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் போன்ற பெருங்கோவில்களில் காளை மாடு அல்லது யானையின் முதுகில் பொருத்தப்பட்டு தேரோட்டம் போன்ற நிகழ்வுகளில் இசைக்கப்படுகிறது.

அமைப்பு

இதன் அடிப்பாகம் தாமிரம் (செம்பு) அல்லது பித்தளை போன்ற உலோகங்களில் செய்யப்பட்டு ஒரு பெரிய அரைவட்டச் சட்டி வடிவில் தோற்றமளிக்கும். மேல் பாகத்தைத் தோல் கொண்டு இழுத்துக் கட்டியிருப்பார்கள். மேலும் தோல் தளர்வுறாமல் இருக்க ஒரு இரும்பு சட்டத்தால் இறுக்கப்பட்டிருக்கும். கோவில் ஊழியர்கள் வளைந்த குச்சிகளைப் பயன்படுத்தி அடித்து இசைப்பார்கள். இதன் பயன் கோவில்களில் நடைபெறும் நிகழ்வுகளை தொலை தூரத்தில் இருக்கும் மக்களுக்கு நகரா இசைப்பதன் மூலம் அறிவிப்பது ஆகும்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகரா_(இசைக்கருவி)&oldid=3057145" இலிருந்து மீள்விக்கப்பட்டது