விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎ஒருங்கிணைப்பாளர்கள்: # தகவலுழவன் - ஒரு நூல் குறித்து, பொதுவகம், விக்கிமூலம், விக்சனரி, விக்கித்தரவு ஆகியத்திட்டங்களில் பங்களிக்கும் முறைகள்.
வரிசை 49: வரிசை 49:
==ஒருங்கிணைப்பாளர்கள்==
==ஒருங்கிணைப்பாளர்கள்==
விக்கித் திட்டங்களில் முன்னனுபவமும் கற்றுக் கொடுக்கும் ஆர்வமுள்ள அனைவரும் இதில் பயிற்சி அளிக்கலாம்.
விக்கித் திட்டங்களில் முன்னனுபவமும் கற்றுக் கொடுக்கும் ஆர்வமுள்ள அனைவரும் இதில் பயிற்சி அளிக்கலாம்.
# மகாலிங்கம்
# மகாலிங்கம் - விக்கிப்பீடியா - கட்டுரையாக்கம்
# நீச்சல்காரன்
# நீச்சல்காரன்
# ஞா. ஸ்ரீதர்
# ஞா. ஸ்ரீதர்

01:46, 18 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 (Tamil Wiki Internship Programme) என்பது 2020 அக்டோபர்-நவம்பர் காலக்கட்டத்தில் 30 நாட்கள் தமிழ் விக்கித்திட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, பங்களிக்கவைக்கும் திட்டமாகும். இதில் விக்கிமூலம், விக்சனரி, பொதுவகம், விக்கிப்பீடியா, விக்கித்தரவு, விக்கிசெய்திகள் போன்ற திட்டங்களுக்கான பயிற்சி வழங்கப்படும். முன்பதிவு செய்த கல்லூரி மாணவர்களுக்கு இணையம் வழியாகப் பயிற்சியும், வழிகாட்டலும் வழங்கப்படும். மாணவர்கள் குறைந்தபட்சப் பங்களிப்பினை அனைத்துத் திட்டங்களிலும் செய்திருக்க வேண்டும். அதனடிப்படையில் அவர்களுக்கான உள்ளகப் பயிற்சிச் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்கள் தங்கள் எழுத்தாற்றல், நுட்பத்திறன், இணைய ஊடக அனுபவத்தை இதன் மூலம் வளர்த்துக் கொள்ளமுடியும். மாணவர்கள் தரப்பில் இப்பயிற்சிக்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

மதுரை பாத்திமா கல்லூரி

இந்த உள்ளகப் பயிற்சித் திட்டத்தில் இந்தாண்டு மதுரை பாத்திமா கல்லூரி, முதுகலைத் தமிழ்த் துறை மாணவர்கள் பங்கெடுக்கிறார்கள்.

விதிமுறைகளும் பயிற்சித்திட்டமும்

  1. இணையம் வழியாக வாரம் இரு/மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் விளைவாகக் கீழ்க்கண்ட இலக்குகளை ஒவ்வொரு மாணவர்களும் இந்தப் பயிற்சிக் காலத்தில் அடைந்திருக்க வேண்டும். இணையவழிப் பயிற்சியில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும் நண்பர்கள் மூலமோ, தானாகவோ கற்று, கீழுள்ள இலக்குகளை அடையலாம்.
  2. விக்கிமூலத்தில் குறைந்தது இரண்டு நூல்களில் இருபது பக்கங்களாவது மெய்ப்புப்பார்க்க வேண்டும்
  3. விக்சனரியில் குறைந்தது இருபது புதுச் சொற்களை உருவாக்கியும், இருபது சொற்களை மேம்படுத்தியுமிருக்க வேண்டும்.
  4. பொதுவகத்தில் குறைந்தது ஐந்து பல்லூடகக்கோப்புகளைப் பதிவேற்றியிருக்க வேண்டும்.
  5. விக்கிப்பீடியாவில் குறைந்தது ஐம்பது பக்கங்களையாவது தொகுத்திருக்க வேண்டும். ஐந்து புதிய கட்டுரைகளை எழுதியிருக்க வேண்டும்.
  6. விக்கித் தரவில் குறைந்தது நூறு தொகுப்புகள் ஏதேனும் ஒருவகையில் செய்திருக்க வேண்டும்.
  7. விக்கிசெய்திகள், விக்கிநூல் அல்லது விக்கியின் இதர தமிழ்த் திட்டங்களில் மொத்தமாக ஐம்பது தொகுப்புகள் செய்திருக்க வேண்டும்.
  8. பிற மொழி விக்கித் திட்டங்களில் விரும்பினால் பங்களிக்கலாம்.
  9. மேற்கண்ட இலக்குகளை 30 நாட்களுக்குள் (முடிக்க இயலாவிட்டாலும் கூடுதலான நாட்களை எடுத்துக் கொண்டு) முடிக்கும்பட்சத்தில் உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக வழங்கப்படும்.

நிகழ்ச்சி நிரல்

உத்தேசமாக அக்டோபர் 21 முதல் நவம்பர் 20 வரை. பயிற்சியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமர்வுகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மாலை நேரத்தில் பயிற்சியாளர்க்கு ஏற்ப நேரம் அமையும்.

இணையவழிப் பயிற்சிக்கான பரிந்துரை.
பயிற்சித் தலைப்பு நாள் பயிற்சியாளர் குறிப்பு
விக்கித்திட்டங்கள் அறிமுகம் முதல்நாள் பயனர் பெயர் உருவாக்கம்
விக்கிமூலம் 1 அமர்வு 1 (முதல்வாரம்) அமைப்பு. மெய்ப்பு முறைகள். நூல்கள் பட்டியல்கள்
விக்கிமூலம் 2 அமர்வு 2 (முதல்வாரம்)
பொதுவகம் 1 அமர்வு 3 (முதல்வாரம்) படங்கள் ஏற்றுதல். இதர கோப்புகள் ஏற்றுதல். உரிமங்கள்.
விக்சனரி 1 அமர்வு 4 (இரண்டாம் வாரம்)
விக்கிப்பீடியா அறிமுகம் அமர்வு 5 (இரண்டாம் வாரம்) பயனர் பக்கம், வரலாறு, பகுப்பு, உள்ளிணைப்புகள்
விக்கிப்பீடியா 1- அமர்வு 6 (இரண்டாம் வாரம்) செல்வா மொழிநடை/கலைச்சொல்லாக்கம்.
விக்கிப்பீடியா 2- அமர்வு 7 (மூன்றாம் வாரம்) வார்ப்புரு, படங்கள் இணைத்தல்
விக்கிப்பீடியா 3- அமர்வு 8 (மூன்றாம் வாரம்) பாஹிம் மொழிபெயர்ப்பு
விக்கித்தரவு அமர்வு 9 (நான்காம் வாரம்)
விக்கிப்பீடியா 4 அமர்வு 10 (நான்காம் வாரம்)
விக்கிசெய்திகள், விக்கிநூல், விக்கிமேற்கோள் அமர்வு 11

ஒருங்கிணைப்பாளர்கள்

விக்கித் திட்டங்களில் முன்னனுபவமும் கற்றுக் கொடுக்கும் ஆர்வமுள்ள அனைவரும் இதில் பயிற்சி அளிக்கலாம்.

  1. மகாலிங்கம் - விக்கிப்பீடியா - கட்டுரையாக்கம்
  2. நீச்சல்காரன்
  3. ஞா. ஸ்ரீதர்
  4. தகவலுழவன் - ஒரு நூல் குறித்து, பொதுவகம், விக்கிமூலம், விக்சனரி, விக்கித்தரவு ஆகியத்திட்டங்களில் பங்களிக்கும் முறைகள்.

பயிற்சிபெறுவோர்