நீலாயதாட்சி உடனுறை குணபரேஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''நீலாயதாட்சி உடனுறை குண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

02:44, 10 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

நீலாயதாட்சி உடனுறை குணபரேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். இக்கோயில் குணபரேச்சரம் கோயில், குணபர வீச்சரம், குணபரேசுரம், குணதரேச்சரம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. மகேந்திர வர்ம பல்லவனுக்குக் குணபரன் என்றும் ஒரு பெயர் உண்டு அந்தக் குணபரனால் கட்டப்பட்டதால் இக்கோயில் குணபரேச்சரம் என்னும் பெயர் பெற்றது. இக்கோயிலானது திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலுக்கு கோயிலுக்குத் தென்கிழக்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது.

வரலாறு

பல்லவன் மகேந்திரவர்மன் சமண சமயத்தவனாக இருந்தான். அப்பர் அடிகளால் சைவ சமயத்துக்கு மாற்றபட்டான். அதன்பிறகு பாடலிபுத்திரத்திலிருந்த சமண கோயிலை இடித்துக் கொண்டு வந்து திருவதிகையில் இந்தக் கோயிலைக் கட்டினான் எனப் பெரிய புராணம் கூறுகிறது.

கோயில் அமைப்பு

குணபரேச்சரம் கோயில் மிகச் சிறியதாக உள்ளது. கோயிலானது கிழக்கு நோக்கி உள்ளது. உள்ளே நுழைந்தால் மண்டபப் பகுதிகளில் பிள்ளையார், திருமால், நந்தி, சூரியன் முதலியோரின் திருவுருவங்கள் உள்ளன. கருவறையிலிருக்கும் இலிங்கம், வீரட்டானேசுரர் கோயிலில் உள்ள இலிங்கம் போலவே பதினாறு பட்டைகள் கொண்டதாய்க் உள்ளது.

குறிப்புகள்