சென்னை மாவட்ட மைய நூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
துப்புரவு சரிபார்க்கப்பட்டது
வரிசை 51: வரிசை 51:
[[பகுப்பு:சென்னை நூலகங்கள்]]
[[பகுப்பு:சென்னை நூலகங்கள்]]
[[பகுப்பு:சென்னை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:சென்னை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:துப்புரவு சரிபார்க்க வேண்டிய சென்னை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த சென்னை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

13:01, 9 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

சென்னை மாவட்ட மைய நூலகம்
தேவநேயப் பாவாணர்
மாவட்ட மைய நூலகம்
நாடுஇந்தியா
வகைமாவட்ட நூலகம்
தொடக்கம்நவம்பர் 10, 1965
அமைவிடம்735, அண்ணாசாலை, சென்னை.
இணையதளம்http://chennai.tnpubliclibraries.gov.in/

தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகம் என்று அழைக்கப்படும் சென்னை மாவட்ட மைய நூலகம், தமிழ்நாட்டரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பொதுநூலகத் துறையைச் சார்ந்த நூலகமாகும்.[1] இது சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

வரலாறு

சென்னை மாவட்ட மைய நூலகத்தை 1960ஆம் ஆண்டு மார்ச்சு 17ஆம் நாளன்று அந்நாள் இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் சர்வபள்ளி இராதாகிருட்டிணனும் உள்ளூர் நூலக அதிகாரசபைத் தலைவர் வி.என்.சுப்புராஜனும் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தனர்.[2]

சென்னை மாவட்ட மைய நூலகத்தின் கட்டிடம் 1965ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாளன்று அப்போதைய மதராசு ஆளுநர் மகாராஜா ஜெய சாம ராஜ உடையார் பகதூரால் மதராசு மாகாண முதல்வர் திரு. எம்.பக்தவச்சலம் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.[2]

தொடக்கத்தில் மதராசு மாவட்ட மைய நூலகம் என்றழைக்கப்பட்டு வந்த இந்நூலகம், ’தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகம்’ என்று தமிழ்நாட்டரசின் பள்ளிக்கல்வித்துறை அரசாணை (G.O. 330, Education Department dated 23.02.1981) மூலமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2]

வசதிகள்

பொதுமக்கள் பயன்பாட்டுக்காகப் பல்வேறு துறை சார்ந்த பல்லாயிரக்கணக்கான நூல்கள் இந்நூலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கட்டணம் எதுவுமின்றி நூல்களை அவ்விடத்திலேயே அமர்ந்து படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நூலக உறுப்பினராவதற்கு ஏதேனும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட ஆளறி சான்றிதழ் வழங்கினால் போதுமானது.[3]

இந்திய நடுவண் அரசும் தமிழ்நாட்டரசும் நடத்தும் போட்டித் தேர்வுகளில் இளைஞர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக இங்கு ஒரு படிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.[4]

தமிழ்நாட்டரசின் பள்ளிக்கல்வித்துறையின் ஓரங்கமான பொதுநூலகத்துறை இயக்ககம் இந்நூலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. நூல் வெளியீடுகளுக்காகவும் இலக்கியக் கூட்டங்களுக்காகவும் இங்குள்ள முதல் தளத்தில் ஓர் அரங்கம் உள்ளது.[5]

மேற்கோள்கள்

  1. http://tnpubliclibraries.gov.in/
  2. 2.0 2.1 2.2 http://chennai.tnpubliclibraries.gov.in/
  3. http://www.tnpubliclibraries.gov.in/index.php?option=com_fsf&view=faq&catid=20&Itemid=
  4. http://www.tnpubliclibraries.gov.in/index.php?option=com_content&view=article&id=170&Itemid=18
  5. http://www.tnpubliclibraries.gov.in/index.php?option=com_contact&view=contact&id=1&Itemid=120



"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_மாவட்ட_மைய_நூலகம்&oldid=2948318" இலிருந்து மீள்விக்கப்பட்டது