சென்னை மாவட்ட மைய நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை மாவட்ட மைய நூலகம்
தேவநேயப் பாவாணர்
மாவட்ட மைய நூலகம்
நாடுஇந்தியா
வகைமாவட்ட நூலகம்
தொடக்கம்நவம்பர் 10, 1965
அமைவிடம்735, அண்ணாசாலை, சென்னை.
இணையதளம்http://chennai.tnpubliclibraries.gov.in/

தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகம் (Devaneya Pavanar District central library) என்று அழைக்கப்படும் சென்னை மாவட்ட மைய நூலகம், தமிழ்நாட்டரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பொதுநூலகத் துறையைச் சார்ந்த நூலகமாகும்.[1] இது சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

வரலாறு[தொகு]

சென்னை மாவட்ட மைய நூலகத்தை 1960ஆம் ஆண்டு மார்ச்சு 17ஆம் நாளன்று அந்நாள் இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் சர்வபள்ளி இராதாகிருட்டிணனும் உள்ளூர் நூலக அதிகாரசபைத் தலைவர் வி.என்.சுப்புராஜனும் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தனர்.[2]

சென்னை மாவட்ட மைய நூலகத்தின் கட்டிடம் 1965ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாளன்று அப்போதைய மதராசு ஆளுநர் மகாராஜா ஜெய சாம ராஜ உடையார் பகதூரால் மதராசு மாகாண முதல்வர் திரு. எம்.பக்தவச்சலம் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.[2]

தொடக்கத்தில் மதராசு மாவட்ட மைய நூலகம் என்றழைக்கப்பட்டு வந்த இந்நூலகம், ’தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகம்’ என்று தமிழ்நாட்டரசின் பள்ளிக்கல்வித்துறை அரசாணை (G.O. 330, Education Department dated 23.02.1981) மூலமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2]

வசதிகள்[தொகு]

பொதுமக்கள் பயன்பாட்டுக்காகப் பல்வேறு துறை சார்ந்த பல்லாயிரக்கணக்கான நூல்கள் இந்நூலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கட்டணம் எதுவுமின்றி நூல்களை அவ்விடத்திலேயே அமர்ந்து படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நூலக உறுப்பினராவதற்கு ஏதேனும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட ஆளறி சான்றிதழ் வழங்கினால் போதுமானது.[3]

இந்திய நடுவண் அரசும் தமிழ்நாட்டரசும் நடத்தும் போட்டித் தேர்வுகளில் இளைஞர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக இங்கு ஒரு படிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.[4]

தமிழ்நாட்டரசின் பள்ளிக்கல்வித்துறையின் ஓரங்கமான பொதுநூலகத்துறை இயக்ககம் இந்நூலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. நூல் வெளியீடுகளுக்காகவும் இலக்கியக் கூட்டங்களுக்காகவும் இங்குள்ள முதல் தளத்தில் ஓர் அரங்கம் உள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-10. பார்க்கப்பட்ட நாள் 2017-05-03.
  2. 2.0 2.1 2.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-11. பார்க்கப்பட்ட நாள் 2017-05-03.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-11. பார்க்கப்பட்ட நாள் 2017-05-03.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-11. பார்க்கப்பட்ட நாள் 2017-05-03.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-11. பார்க்கப்பட்ட நாள் 2017-05-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_மாவட்ட_மைய_நூலகம்&oldid=3555878" இலிருந்து மீள்விக்கப்பட்டது