மார்கச்சை அணியா நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 22: வரிசை 22:
{{Reflist}}
{{Reflist}}
[[பகுப்பு:பெண்ணிய வரலாறு]]
[[பகுப்பு:பெண்ணிய வரலாறு]]
[[பகுப்பு:அக்டோபர் சிறப்பு நாட்கள்]]

13:27, 11 சனவரி 2020 இல் கடைசித் திருத்தம்

No Bra Day
நாட்கள்அக்டோபர் 13 (தேசிய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தில்)
காலப்பகுதிஆண்டுதோறும்
அமைவிடம்(கள்)உலக அளவில்
Establishedசூலை 9, 2011 (2011-07-09)
வலைத்தளம்
No Bra Day

மார்கச்சை அணியா நாள் (No Bra Day) என்பது அக்டோபர் 13 ஆம் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இது பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் மார்புக்கச்சை அணிவதைத் தவிர்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதன்படி இந்த நாளில் இறுக்கமான ஆடைகளைத் தவிர்ப்பது மற்றும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பரப்புரை உத்தியாக மேற்கத்திய நாடுகளில் கருதப்படுகிறது.[1] துவக்கத்தில் 2011 ஜூலை 9, 2011 அன்று மார்கச்சை அணியா நாள் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் மூன்று ஆண்டுகளில் இது தேசிய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான அக்டோபர் 13 க்கு மாற்றப்பட்டது. சமூக ஊடகங்களில் பயனர்கள் மார்பக புற்றுநோய் அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வை அளிக்கவும், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும் #nobraday என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி இடுகையிட ஊக்குவிக்கப்படுகிறார்கள். சமூக ஊடக தளங்களில் சில பயனர்கள் மார்கச்சு அணியாத பெண்களின் படங்களை இடுகையிட ஊக்குவிக்கிறார்கள். சில பெண்கள் மார்கச்சு அணியா நாளை ஒரு அரசியல் கூற்றாக ஏற்றுக்கொள்கிறார்கள், மற்றவர்கள் கட்டுப்பாட்டான, சங்கடமான ஆடை என்று கருதுவதை நிராகரிக்கும் வசதியை விரும்புகிறார்கள்.

இந்த நாள் அனுசரிப்பானது உலகம் முழுவதும் பரவியுள்ளது. கனடாவின் டொராண்டோவில் நடந்த ஒரு மருத்துவ நிகழ்வில் இந்த நிகழ்வு குறித்து அறிமுகப்படுத்தப்பட்டது. இது மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டவர்களை மார்பக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை மேற்கொள்வதை பரிசீலிப்பதை ஊக்குவிக்கிறது. 2011 அக்டோபர் 19 அன்று முதன்முதலில் நடைபெற்ற இந்திகழ்வுக்கு, மார்பகப் புற்றுநோய் அறுவைச்சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நாள் (Breast Reconstruction Awareness) என்பதன் சுருக்கமே BRA நாள் என்று பெயரிடப்பட்டது. இது ஒரு அநாமதேய நபரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, இவர் பெண்களை துணிச்சல் கொள்ளவும், மார்பக புற்றுநோய் அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் ஊக்குவிக்கும் ஒரு வழியாக மார்கச்சை அணியா நாளை கருத்தில் கொண்டார். இந்த நாளானது பெண்கள் உடலை பாலியல் ரீதியாக சுரண்டுவதாக சிலர் கருதுகின்றனர், அதே நேரத்தில் இவர்கள் ஒரு தீவிரமான நோயைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கச்சை_அணியா_நாள்&oldid=2892063" இலிருந்து மீள்விக்கப்பட்டது