ஓமந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
updated link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 14: வரிசை 14:
| subdivision_type3 = [[இலங்கையின் மாவட்டங்கள்|District]]
| subdivision_type3 = [[இலங்கையின் மாவட்டங்கள்|District]]
| subdivision_name3 = [[வவுனியா மாவட்டம்|Vavuniya]]
| subdivision_name3 = [[வவுனியா மாவட்டம்|Vavuniya]]
| subdivision_type4 = [[இலங்கையின் பிரதேசச் செயலகங்கள்|DS Division]]
| subdivision_type4 = [[இலங்கையின் பிரதேச செயலகங்கள்|DS Division]]
| subdivision_name4 = Vavuniya South (Tamil)
| subdivision_name4 = Vavuniya South (Tamil)
| latd =08 | latm =52 | lats =0 | latNS =N
| latd =08 | latm =52 | lats =0 | latNS =N

21:48, 5 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

ஓமந்தை
நகரம்
Countryஇலங்கை
ProvinceNorthern
DistrictVavuniya
DS DivisionVavuniya South (Tamil)

ஓமந்தையானது இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் அரச மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலுள்ள ஓர் எல்லைப் பிரதேசமாகும். இங்கே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்குமாக சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இது புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இலங்கை இந்திய நேரப்படி காலை 7 மணியில் இருந்து மாலை 5:30 வரை திறந்திருக்கவேண்டும் எனினும் தற்போது எல்லாக் கிழைமையில் நாட்களிலும் காலை 9 மணியில் இருந்து மாலை 17:30 மணிவரையே திறந்திருக்கும்.

6 அக்டோபர் 2007 இலங்கைப் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட சுற்றுநிருபப்படி அனைத்து ஆபத்துவி பணி ஊர்திகள் (ஐக்கிய நாடுகள் விசேட அமைப்புக்கள், இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் யாவும் பன்னாட்டு அமைப்பு வாகனங்களும் வவுனியா கண்டிவீதியில் தேக்கவத்தையில் உள்ள ரம்யா இல்லத்தில் (ரம்யா ஹவுஸ்) பதிவினை மேற்கொண்டால் மாத்திரமே மேற்கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் பிரவேசிக்க இயலும். இப்பதிவில் செல்பவர்களின் விவரம், அடையாள அட்டை விபரங்கள், பிரயாணத்தை மேற்கொள்ளும் திகதி மீள்திரும்பும் திகதி ஆகியவற்றும் வாகன இலக்கம் (இயந்திர இலக்கம், அடிச்சட்ட இலக்கம் உட்பட) விபரங்களை வன்னிக் கட்டளைப் பிரிவில் உள்ள மேஜர் பண்டாரவிற்குச் சமர்பிக்கப்படவேண்டும் அல்லது 211 கட்டளைப் பிரிவின் மேஜர் ஜயத்திலகவிற்கு ஆகக்குறைந்தது ஒருநாள் முன்னராகவே மத்தியானம் 12:00 முன்னராகச் சமர்பிக்கப்படவேண்டும். இவ்வாறு விபரங்களை சமர்பித்தால் அன்றி எந்தப் பன்னாட்டு அமைப்பினரும் ஓமந்தையூடாக விடுதலைப் புலிகளின் பகுதிக்குச் செல்ல இயலாது.

கல்வி

இங்கு ஓமந்தை மத்திய கல்லூரி அமைந்துள்ளது. இது போரினால் பாதிக்கபபட்டுப் பின்னர் நிக்கோட் மூலம் புனரமைக்கப்பட்டது.

ஓமந்தை சோதனைச் சாவடி

பொருளாதரத் தடை

இராணுவத்தினரால், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பெற்றோல், டீசல், பற்றறி, இரும்பு மற்றும் வேளாண்மை உரவகைகள் போன்றவற்றைக் கொண்டுசெல்ல முடியாது. இராணுவத்தினரால், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து எந்தவொரு வேளாண்மை விளைபொருட்களும் ஓமந்தைச் சாவடியூடாக அனுமதிக்கப்படமாட்டாது.

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் தொடர்பாடல் உபகரணங்களைப் எவரும் கொண்டுவர பொதுவாக அனுமதிப்பதில்லை.

இராணுவப் பகுதி

சொந்த வாகனத்தில் செல்பவர்கள்

  • தேசிய ஆளடையாள அட்டை
  • வாகனத்தின் மூலப் பிரதியும் பிரதியும்
  • தீர்வைப் பிரதி
  • காப்புறுதிப் பிரதி
  • சாரதி அனுமதிப் பத்திர மூலப் பிரதியும் பிரதியும்

பேருந்து அல்லது வேறு வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் பிரயாணிப்பவர்கள்

  • தேசிய ஆளடையாள அட்டை மாத்திரம் போதுமானது.

விடுதலைப்புலிகளின் பகுதி

சொந்த வாகனத்தில் செல்பவர்கள்

  • விடுதலைப் புலிகளின் நிதந்தரப் பயண அனுமதி அல்லது இலங்கை அரசின் தேசிய ஆளடையாள அட்டை
  • வாகனத் தீர்வைகட்டவில்லை எனின்
    • வாகனத்தின் மூலப் பிரதி
    • தீர்வை மூலப்பிரதி
    • காப்புறுதிப் மூலப் பிரதி
  • வாகனத்தீர்வை கட்டியிருப்பின் அந்த ஆவணம்.

பேருந்து அல்லது பிற வாகனங்களில் பிரயாணிப்பவர்கள்

  • விடுதலைப் புலிகளின் நிதந்தரப் பயண அனுமதி அல்லது இலங்கை அரசின் தேசிய ஆளடையாள அட்டை

குறிப்பு: நிதந்தர அனுமதியின்றிப் விடுதலைப் புலிகளின் பகுதிகளிற்குச் செல்பவர்கள் தமது குறிப்பிட்ட இடத்தில் தமது வரவை மனிதவள அலுவலகத்தில் உறுதிப்படுத்திய பின்னரே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளிச்செல்லமுடியும். இந்நடைமுறையானது தற்போதைய அசம்பாவிதங்களையடுத்தே நடைமுறையிலுள்ளது.

மனித உரிமை மீறல்கள்

  1. இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வன்னிப் பகுதியில் இருந்து வவுனியா வருவர்களை விசாரித்து விட்டு சந்தேகமானவர்கள் எனக் கூறிக்கொண்டு பணம் பறிக்கும் நோக்குடன் தமிழ்ர்களைப் போகவிட்டு பின்னர் தாண்டிக்குளம் வளைவுப் பகுதியில் வைத்து (விவசாயக் கல்லூரிக்கு அருகில்) இரகசியமான முறையில் கடத்துகின்றனர்.
  2. விடுதலைப் புலிகளிடம் அனுமதி இன்றி எவரும் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியை விட்டு வரமுடியாது உள்நுளைபவர்களும் அனுமதி பெற்றுத்தான் நுளையலாம். இது சாதாரண மக்கள் மாத்திரம் அன்றி அமைப்பு ஊழியர்களுக்கும் இந்நடைமுறை உண்டு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமந்தை&oldid=2773039" இலிருந்து மீள்விக்கப்பட்டது