ருத்திரமாதேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 33: வரிசை 33:
[[பகுப்பு:1295 இறப்புகள்]]
[[பகுப்பு:1295 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய அரசர்கள்]]
[[பகுப்பு:இந்திய அரசர்கள்]]
[[பகுப்பு:நெல்லூர் மாவட்ட நபர்கள்]]

06:42, 30 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

ருத்திரமாதேவி
ருத்ரம்மா தேவி
இராணி ருத்ரம்மா தேவியின் சிலை
முன்னையவர்கணபதி தேவா
பின்னையவர்Prataparudra II
பிறப்புருத்ரம்மா தேவி
இறப்புகி.பி. 1289 நவம்பர் 27
சந்துபட்லா
துணைவர்சாளுக்கிய வீரபத்ருலு
அரசமரபுகாக்கத்தியர்
தந்தைகணபதி தேவா

ருத்திரமாதேவி கி.பி. 1259 முதல் 1295 வரை தக்காணத்தில் வாரங்கல்லை ஆண்ட காகதீய அரசியார் ஆவார். வாரங்கல்லை ஆண்ட கணபதிதேவரின் மகளான இவர், தம் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அரசியாக முடிசூட்டிக் கொண்டார். கிழக்குச் சாளுக்கியத்தில் நைதவோலுவின் இளவரசனான வீரபத்திரன் என்பவரை மணம் செய்துகொண்டார்.[1] இவரது தொடக்கக்கால ஆட்சியில் சிற்றரசர்கள் பலர் தொல்லை கொடுத்து வந்தனர். அரசிக்கு உறுதுணையாக இருந்த அம்பதேவர் உதவியுடன் அத்தொல்லைகளை அடக்கினார். யாதவத் தலைவர் மகாதேவர் இவரை எதிர்த்துப் போர்செய்து தோல்வி அடைந்தார். இப்போர்களில் ருத்திரமாதேவியின் பேரன் பிரதாபருத்திரன் வெற்றிவாகை சூடினான். ருத்திரமாதேவி கி.பி. 1280 - ஆம் ஆண்டு பிரதாபருத்திர தேவரை இளவரசராக நியமித்தார்.

எட்டாண்டுகளுக்கு பின் அம்பதேவர் ஒய்சாளர், யாதவர் ஆகியோரைத் துணைக்கு சேர்த்துக் கொண்டு, ருத்திரமாதேவிக்கு எதிராகப் போர் தொடுத்தார். 1291 - இல் பிரதாபருத்திரர் அதனை அடக்கி வெற்றிவாகை சூடினார். 1295 - இல் ருத்திரமாதேவி காலமானபோது பிரதாபருத்திரர் 'இரண்டாம் பிரதாபருத்திரர்' என்ற பெயருடன் முடிசூட்டிக் கொண்டார்.

உசாத்துணை

In brief about the life of Rani Rudrama Devi

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருத்திரமாதேவி&oldid=2768460" இலிருந்து மீள்விக்கப்பட்டது