இராம் நாயக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
சி தானியங்கிஇணைப்பு category 11வது மக்களவை உறுப்பினர்கள்
வரிசை 32: வரிசை 32:
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:11வது மக்களவை உறுப்பினர்கள்]]

16:46, 17 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

இராம் நாயக் (பிறப்பு: ஏப்ரல் 16, 1934) இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேச ஆளுநரும்[1] ஆவார்.

இராம்நாய்க் மகாராட்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் அட்பாடியில் நடுத்தர தேசஸ்த் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். மே 17, 1960இல் குந்தா நாயக்கை மணந்து இரு மகள்களுக்குத் தந்தையானார். இவரது மூத்த மகள் நிசிகந்தா நாயக் உயிரியலாளர் ஆவார்; இளைய மகள் விசாகா குல்கர்னி இவருக்கு தனிச்செயலராகப் பணியாற்றுகிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான இராம்நாய்க் 13ஆவது மக்களவையில் பங்கேற்றுள்ளார் (1999–2004). முந்தைய தேசிய சனநாயக கூட்டணி அரசில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவளி அமைச்சராக பணிபுரிந்துள்ளார். 14ஆவது மக்களவையில் மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் இந்தி நடிகரும் இந்தியத் தேசியக் காங்கிரசின் வேட்பாளருமான கோவிந்தாவிடம் தோற்றார். இதனையடுத்து 2014ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.[2]

பொறுப்பிலிருந்த பதவிகள்

  • 1969-1977 - அமைப்புச் செயலாளர், பாரதீய ஜனசங்கம், மும்பை
  • 1977-78 - பொதுச் செயலாளர், ஜனதா கட்சி, மும்பை
  • 1978-1989 - உறுப்பினர், மகாராட்டிர சட்டப் பேரவை (3 முறை)
  • 1979-1980 - தலைவர், ஜனதா கட்சி, மும்பை
  • 1980-1986 - தலைவர், பாஜக, மும்பை
  • 1986-1989 - துணைத் தலைவர், பாஜக, மகாராட்டிரம்
  • 1989 - 9ஆவது மக்களவை உறுப்பினர்
  • 1991 - 10ஆவது மக்களவை உறுப்பினர்
  • 1999 - 13ஆவது மக்களவை உறுப்பினர்
  • 1999-2004 - நடுவண் ஆய அமைச்சர், பாறைநெய் மற்றும் இயற்கை வளி
  • 2004 முதல் - பாஜக அனைத்திந்திய ஒழுங்குக் குழுத் தலைவர்

மேற்சான்றுகள்

  1. "உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்". தினகரன். 14 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 14 சூலை 2014.
  2. http://zeenews.india.com/news/nation/former-petroleum-minister-ram-naik-not-to-contest-ls-elections_879203.html

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_நாயக்&oldid=2692713" இலிருந்து மீள்விக்கப்பட்டது