பீர்பால் சகானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27: வரிசை 27:
[[பகுப்பு:1891 பிறப்புகள்]]
[[பகுப்பு:1891 பிறப்புகள்]]
[[பகுப்பு:1949 இறப்புகள்]]
[[பகுப்பு:1949 இறப்புகள்]]
[[பகுப்பு:திருப்பூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

10:46, 4 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

பீர்பால் சகானி (Birbal Sahni FRS,[1] 14 நவம்பர் 1891 – 10 ஏப்ரல் 1949) என்பவர் ஒரு தொல் தாவரவியல் துறை வல்லுநர் ஆவார்.

பீர்பால் சகானியின் மார்பளவு சிலை (பிர்லா இன்ஸ்டிடியூஷன் அண்ட் டெக்னாலஜிகல் மியூசியம்)

பிறப்பு

பீர்பால் சகானி 14 நவம்பர் 1891 – ஆம் ஆண்டு சாஹாபூர் மாவட்டத்தில் பிறந்தார். தற்போது பாகிஸ்தானில் உள்ளது. ஐஸ்வரிதேவி, லாலு ருச்சி ராம் சாஹ்னி தம்பதியினரின் மூன்றாவது மகன் ஆவார்.

படிப்பு

அவர் இலாகூரில் உள்ள கல்லூரியிலும், பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும் பயின்று 1914 –ம் ஆண்டு கேம்பிரிட்ஜில் உள்ள இம்மானுவேல் கல்லூரியில் பட்டம் பெற்றார். அவரது கல்வி முடிந்த பிறகு இந்தியா திரும்பினார்.

பணி

வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தாவரவியல் பேராசிரியராக சுமார் ஒரு வருட காலம் பணியாற்றியுள்ளார்.

திருமணம்

அவரின் வேலையின் மீது ஆர்வம் கொண்டிருந்தவரும் அவருடைய மனநிலையுடன் மாறாத ஒத்த கருத்தை கொண்டிருந்தவரும் ஆன சாவித்திரி சூரி எனும் பெண்மணியை 1920 – ஆம் வருடம் திருமணம் செய்துகொண்டார்.

மேற்கொண்ட ஆய்வுகள்

அவர் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள படிமங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். அவர் லக்னோவில் பீர்பால் இன்ஸ்டியூட் ஆப் Palacobotany என்ற கல்வி நிறுவனத்தை நிறுவினார். தொல் பயிரியல் துறையில் படிப்பதற்கு தாவரவியல் மற்றும் நிலவியியல் பற்றி அறிந்திருக்கவேண்டும். கோண்டுவான ராஜ்ஜியத்தில் உள்ள தாவரங்கள் பற்றி விரிவாக படித்த முதல் தாவரவியல் விஞ்ஞானி பீர்பால் சகானி ஆவார். சகானி பிகாரில் உள்ள ராஜ் மகால் மலைகளில் உள்ள பண்டைய தாவரங்களின் படிமங்களை ஆராய்ந்தார். இங்கே பல புதிய இன தாவர இனங்களை கண்டுபிடித்தார். பீர்பால் ஒரு தாவரவியல் அறிஞராக மட்டும் இல்லாமல் புவியியல் அறிஞராகவும் திகழ்ந்தார். அவர் சில எளிமையான கருவிகளையும் பழமையான தாவரங்கள் மீது இருந்த பெரும் அறிவையும் பயன்படுத்தி சில பழமையான பாறைகளின் காலத்தை மதிப்பிட்டார்.

தற்பொழுது பாகிஸ்தானில் உப்பின் வரம்பு 40 to 60 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாகும் என்று மக்களுக்கு எடுத்துக்காட்டினார். மேலும் அவர் மத்திய பிரதேசத்தில் உள்ளவைகள் முன்னால் நிலையில் உள்ளது என்றும், ஏறத்தாழ 62 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் டெக்கான் பொறிகள் (Decan Traps)மூலம் கண்டுபிடித்தார். மேலும், சனி தொல்லியல் துறையிலும் மிகவும் ஆர்வம் காட்டினார். அவர் 1936 ஆம் ஆண்டு ரோகக் நகரில் நாணய அச்சுகள் இருந்ததை தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்தார். பழங்கால இந்தியாவின் உலோக நாணயத்தின் தொழில் நுட்பம் பற்றிய ஆய்வுகளுக்காக நீயும்ஸ்டி சொசைட்டி ஆப் இந்திய நிறுவனம் நெல்சன் ரைட் என்ற பதக்கத்தை வழங்கியது. அவர் ஆசிரியராக இருந்தபொழுது தாவரவியல் துறையில் கற்பித்தல் பணீயின் தரத்தை முதலில் உயர்த்தியவர் என்றால் மிகையாகாது. 10th ஏப்ரல் 1949 இரவு தன் இன்னுயிரை நீத்தார். இறப்பதற்கு முன் சுமார் ஒர் வாரத்திற்கு முன் தனது கல்வி நிறுவனத்தில் அடிக்கல் நாட்டினார். Palacobotony Institute- தான் உலகில் முதல் தொல் பயிரியல் துறையின் கல்வி நிறுவனமாகும். அவரது மறைவிற்கு பின் அவரது மனைவியால் கட்டிமுடிக்கப்பட்டது. அந்த கல்வி நிறுவனம் தான் தற்பொழுது உள்ள Birbal Sahni Institute of Palacobotany என்று அறியப்படுகின்றது.

மேற்கோள்கள்

  1. Hugh Hamshaw Thomas (1950). "Birbal Sahni. 1891-1949". Obituary Notices of Fellows of the Royal Society 7 (19): 264. doi:10.1098/rsbm.1950.0017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீர்பால்_சகானி&oldid=2335594" இலிருந்து மீள்விக்கப்பட்டது