ஜனநாயக மக்கள் முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி removed Category:மலையகத் தமிழர் அரசியல்; added Category:மலையகத் தமிழர் அரசியல் கட்சிகள் using HotCat |
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{unreferenced}} |
|||
{{Infobox political party |
{{Infobox political party |
||
|name = ஜனநாயக மக்கள் முன்னணி |
|name = ஜனநாயக மக்கள் முன்னணி |
02:58, 25 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஜனநாயக மக்கள் முன்னணி | |
---|---|
Democratic People's Front | |
தலைவர் | மனோ கணேசன் |
முன்னர் | மேலக மக்கள் முன்னணி |
தலைமையகம் | 72 பாங்க்சால் வீதி, கொழும்பு 11 |
தேசியக் கூட்டணி | தமிழ் முற்போக்கு கூட்டணி |
தேர்தல் சின்னம் | |
ஏணி | |
இலங்கை அரசியல் |
ஜனநாயக மக்கள் முன்னணி (Democratic People's Front, முன்னர் மேலக மக்கள் முன்னணி (Western People's Front), என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சி. இது முக்கியமாக மேற்கு மாகாணத்தில் மட்டுமே தேர்தல்களில் போட்டியிடுகிறது.
மேலக மக்கள் முன்னணி ஆரம்பத்தில் ஒரு தொழிற்சங்கமாகவே ஆரம்பிக்கப்பட்டது, பின்னர் அரசியல்கட்சியாக மாற்றப்பட்டது. இக்கட்சி கொழும்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் இடையே பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளது. இக்கட்சியின் தலைவர் மனோ கணேசன்.
2011 உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்
2011 இல் 322 உள்ளூராட்சி சபைகளுக்கு இடம்பெற்ற தேர்தல்களில் மகிந்த ராசபக்ச தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி 270 சபைகளைக் கைப்பற்றியது. மனோ கணேசன் தலைமையில் ஜனநாயக மக்கள் முன்னணி எந்த ஒரு சபையையும் கைப்பற்றவில்லை. ஆனாலும் 4 சபைகளில் போட்டியிட்டு 10 உறுப்பினர்களைப் பெற்றது. ஜனநாயக மக்கள் முன்னணியின் கூட்டணியில் விக்கிரமபாகு கருணாரத்தினவின் இடது முன்னணியும் போட்டியிட்டிருந்தது. கொழும்பு மாநகரச்பைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முழுமையான ஆதரவை ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வழங்கியிருந்தது.
ஜமமு வென்ற உறுப்பினர்கள்
உள்ளூராட்சி சபை |
வாக்குகள் | % | ஜமமு உறுப்பினர்களின் எண்ணிக்கை |
ஜமமு உறுப்பினர்களின் பெயர்களும் பெற்ற வாக்குகளும் | |
---|---|---|---|---|---|
கொழும்பு மாநகரசபை | 26,229 | 11.07% | 6 | மனோ கணேசன் (28,433) எஸ். குகவரதன் (4,223), கே. ரி. குருசாமி (3,978), கங்கைவேணியன் (3,389), சி. பாஸ்கரா (3,156), லோரன்ஸ் பெர்னாண்டோ (1,531) | |
அம்பகமுவ பிரதேச சபை | 4,855 | 6.93% | 2 | விபரம் இல்லை | |
தெகிவளை - கல்கிசை மாநகர சபை | 2,167 | 2.86% | 1 | விக்கிரமபாகு கருணாரத்தின (2,171) | |
கொலன்னாவ நகர சபை | 938 | 3.9% | 1 | அரவிந்தன் முத்துவீரன் ராஜகுமாரன் (904) | |
மொத்தம் | 34,189 | - | 10 | - | |
மூலம்:"உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011". Department of Elections, Sri Lanka. |