மின் விளக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:Light-bulb-and-filament.jpg|thumb|200px|An incandescent [[light bulb]] and its glowing filament. Invented by [[Thomas Edison]], the light bulb was improved upon by [[Irving Langmuir]] who found that by filling the bulb with an [[inert gas]] would prolong the life of the filament.]]

[[மின்சாரம்|மின்சாரத்தைப்]] பயன்படுத்தி [[ஒளி|ஒளித்]] தேவைக்காக ஒளியை உருவாக்கும் [[சாதனம்|சாதனமே]] '''மின் விளக்கு''' ஆகும். மின் விளக்கின் கண்டுபிடிப்பு மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது என்று சொல்லலாம். மனிதனுடைய செயற்பாடுகளுக்காகக் கிடைக்கக்கூடிய [[நேரம்|நேரத்தை]] இரண்டு மடங்காக ஆக்கிய பெருமை மின்விளக்குகளுக்கே உரியது.
[[மின்சாரம்|மின்சாரத்தைப்]] பயன்படுத்தி [[ஒளி|ஒளித்]] தேவைக்காக ஒளியை உருவாக்கும் [[சாதனம்|சாதனமே]] '''மின் விளக்கு''' ஆகும். மின் விளக்கின் கண்டுபிடிப்பு மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது என்று சொல்லலாம். மனிதனுடைய செயற்பாடுகளுக்காகக் கிடைக்கக்கூடிய [[நேரம்|நேரத்தை]] இரண்டு மடங்காக ஆக்கிய பெருமை மின்விளக்குகளுக்கே உரியது.



15:48, 11 அக்டோபர் 2005 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Light-bulb-and-filament.jpg
An incandescent light bulb and its glowing filament. Invented by Thomas Edison, the light bulb was improved upon by Irving Langmuir who found that by filling the bulb with an inert gas would prolong the life of the filament.

மின்சாரத்தைப் பயன்படுத்தி ஒளித் தேவைக்காக ஒளியை உருவாக்கும் சாதனமே மின் விளக்கு ஆகும். மின் விளக்கின் கண்டுபிடிப்பு மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது என்று சொல்லலாம். மனிதனுடைய செயற்பாடுகளுக்காகக் கிடைக்கக்கூடிய நேரத்தை இரண்டு மடங்காக ஆக்கிய பெருமை மின்விளக்குகளுக்கே உரியது.

வரலாறு

மின்விளக்கை உருவாக்குவதற்கான முயற்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டன. 1811 இலேயே ஹம்பிரி டேவி என்பார் இரண்டு மின் முனைகளுக்கிடையே மின்சாரம் பாயும்போது ஒளி உண்டாவதைக் கண்டு பிடித்தார். எனினும் இம் முறையைப் பயன்படுத்தி ஒளியை உருவாக்கும் முயற்சிகள், மின் முனைகள் மிக விரைவாக எரிந்து போனதன் காரணமாக செயல் முறையில் வெற்றி பெறவில்லை. ஜேம்ஸ் பிறெஸ்கொட் ஜூல் என்பவர், மின்சாரம் ஒரு மின்தடையுள்ள கடத்தியூடாகப் பாயும்போது அது வெப்பமடைந்து, அவ் வெப்பசக்தி மின்சக்தியாக மாறி ஒளிரும் எனக் கண்டுபிடித்தார். ஆனாலும் இக் கோட்பாட்டைப் பயன்படுத்தி மின் விளக்குகளை உருவாக்குவதற்குத் தேவையான நுண்ணிழைகளைச் செய்வதற்குப் பொருத்தமான பொருளொன்று அகப்படாமையும், அதனை விரைவில் எரிந்துபோகாது பாதுகாக்க முடியாமையுமே முக்கியமான தடைகளாக இருந்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த சேர் ஜோசப் வில்சன் ஸ்வான் என்பவரே வெற்றிடத்தைக் கொண்ட மின் குமிழொன்றை முதலில் உருவாக்கியவராவார். ஆனாலும் இவர் குமிழினுள் உருவாக்கிய வெற்றிடத்தை நிலையாக வைத்திருக்க முடியாததினால் இவரது முயற்சி தோல்வியடைந்தது. 1879 இல் காபன் நுண்ணிழை ஒன்றை வெற்றிடக் குமிழொன்றினுள் பொருத்தி 40 மணிநேரம் வெற்றிகரமாக ஒளிரவிட்டதன் மூலம் மின் விளக்கைக் கண்டு பிடித்த பெருமை தொமஸ் அல்வா எடிசனுக்குக் கிடைத்தது.

மின் விளக்கின் வகைகள்

சுமார் 125 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட வகையான மின் விளக்குகள் இன்னும் சில முன்னேற்றங்களுடன் பயன்பாட்டில் இருந்தாலும், வேறு பல வகையான மின் விளக்குகளும் உருவாக்கப் பட்டுள்ளன. முக்கியமான சில மின்விளக்கு வகைகள் வருமாறு:

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_விளக்கு&oldid=18636" இலிருந்து மீள்விக்கப்பட்டது