நடிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
wikidata fix (fixing every language)
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
'''நடிகர்''' அல்லது '''நடிகை ''' என ஓர் திரைப்படத்திலோ,தொலைக்காட்சியிலோ,மேடை நாடகத்திலோ,வானொலி நாடகத்திலோ பங்கு பெற்று வேடமேற்று நடிப்பவரைக் குறிக்கிறோம். சிலநேரங்களில் அவர்கள் பாடவோ அல்லது நடனமாடவோ மட்டுமே பங்காற்றியிருப்பர்.
'''நடிகர்''' அல்லது '''நடிகை ''' என ஓர் திரைப்படத்திலோ,தொலைக்காட்சியிலோ,மேடை நாடகத்திலோ,வானொலி நாடகத்திலோ பங்கு பெற்று வேடமேற்று நடிப்பவரைக் குறிக்கிறோம். சிலநேரங்களில் அவர்கள் பாடவோ அல்லது நடனமாடவோ மட்டுமே பங்காற்றியிருப்பர்.



15:46, 23 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

நடிகர் அல்லது நடிகை என ஓர் திரைப்படத்திலோ,தொலைக்காட்சியிலோ,மேடை நாடகத்திலோ,வானொலி நாடகத்திலோ பங்கு பெற்று வேடமேற்று நடிப்பவரைக் குறிக்கிறோம். சிலநேரங்களில் அவர்கள் பாடவோ அல்லது நடனமாடவோ மட்டுமே பங்காற்றியிருப்பர்.

வரலாறு

மேற்கத்திய வரலாறுகளில் முதன்முதலில் நடிகர் ஒருவர் நடித்ததாகக் கருதப்படுவது கி.மு 534 ஆகும். அன்று கிரேக்க நடிகர் தெஸ்பிஸ், தியேட்டர் டியொனிசுஸ் என்ற நாடகத்தில் வேடமணிந்து முதல் வார்த்தைகளை பேசியபோது நடிப்பின் துவக்கம் நிகழ்ந்ததாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். அது வரை கதை சொல்லிவந்த பழக்கத்திலிருந்து இது முக்கிய மாற்றமாக அமைந்தது. முதல் நடிகர் பெயர் தெஸ்பிஸ் என்பதாலேயே இன்றும் நடிகர்களை ஆங்கிலத்தில் தெஸ்பியன்ஸ் எனக் குறிப்பிடுகின்றனர்.

தமிழ் சூழ்நிலை

சங்க கால முத்தமிழில் நாடகம் ஒன்றாக அமைந்துள்ளதால் பழங்காலத்திலிருந்தே இத்துறை தமிழகத்தில் நிலை பெற்றிருந்ததை உணரலாம். கூத்து என்ற நாடகமும் நடனமும் இசையும் கலந்த வடிவத்தில் நடிகர்கள் கூத்து கட்டுபவர்கள் என அறியப் பட்டனர். இருபதாம் நூற்றாண்டில் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்றவர்கள் நாடகக்கலைக்கு புத்துயிர் ஊட்டியபோது முதன்மை நடிகர்கள் இராஜபார்ட் என்றும், பெண் வேடமிட்ட ஆண் நடிகர்கள் ஸ்த்ரீ பார்ட் எனவும் எதிர்மறை நாயகர்கள் கள்ளபார்ட் எனவும் அழைக்கப்பட்டனர்.

பெண்ணிய நிலை

ஆங்கிலத்தில் நடிகைகளுக்கு actress என்று அழைக்கப்பட்டு வந்தது. இதனை பெண்ணியவாதிகள் எதிர்த்ததினால் இருபாலரையும் actor என்றே குறிப்பிடுதல் நவீன மரபாயுள்ளது.

பல சமூகங்களில் பெண்கள் நடிப்பது இழிவாகக் கருதப்படுகிறது. இதனாலேயே பெண்கள் வேடங்களையும் ஆண்கள் ஏற்று நடிப்பது வழக்கமாக இருந்தது. ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் குழுவிலேயே பெண் வேடங்களை ஆண்கள் ஏற்று நடித்தனர்.


நடிகைகள் சிறுவர்கள் வேடத்தில்

ஓர் சிறுவனின் வேடத்திற்கு வளர்ந்த ஆணை விட பெண் நடிகையே பொருத்தமாக இருந்ததால் சிறுவர் வேடங்களில் (பால முருகன், இளம் கண்ணன்) வேடங்களில் நடிகைகள் நடித்துள்ளனர்.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
நடிகர்கள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நடிகைகள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடிகர்&oldid=1683263" இலிருந்து மீள்விக்கப்பட்டது