இயந்திர மொழிபெயர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: hy:Մեքենական թարգմանություն
சி தானியங்கி: 62 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 24: வரிசை 24:
[[பகுப்பு:இயற்கை மொழி முறையாக்கம்]]
[[பகுப்பு:இயற்கை மொழி முறையாக்கம்]]
[[பகுப்பு:செயற்கை அறிவாண்மைச் செயலிகள்]]
[[பகுப்பு:செயற்கை அறிவாண்மைச் செயலிகள்]]

[[af:Outomatiese vertaling]]
[[ar:ترجمة آلية]]
[[be:Машынны пераклад]]
[[be-x-old:Машынны пераклад]]
[[bg:Машинен превод]]
[[ca:Traducció automàtica]]
[[cs:Strojový překlad]]
[[cv:Тăлмач-программа тăлмачлани]]
[[cy:Peiriant cyfieithu]]
[[da:Maskinoversættelse]]
[[de:Maschinelle Übersetzung]]
[[en:Machine translation]]
[[eo:Maŝintradukado]]
[[es:Traducción automática]]
[[et:Masintõlge]]
[[eu:Itzulpengintza automatiko]]
[[fa:ترجمه ماشینی]]
[[fi:Konekääntäminen]]
[[fr:Traduction automatique]]
[[gl:Tradución automática]]
[[he:תרגום מכונה]]
[[hi:यान्त्रिक अनुवाद]]
[[hr:Strojno prevođenje]]
[[hu:Gépi fordítás]]
[[hy:Մեքենական թարգմանություն]]
[[ia:Traduction automatic]]
[[id:Terjemahan mesin]]
[[is:Vélþýðing]]
[[it:Traduzione automatica]]
[[ja:機械翻訳]]
[[kk:Машиналық аударма]]
[[ko:기계 번역]]
[[la:Translatio machinalis]]
[[lt:Automatinis vertimas]]
[[ltg:Puorvārstivs]]
[[lv:Mašīntulkošana]]
[[mg:Fandikana ataon'ny milina]]
[[mk:Машинско преведување]]
[[mr:मशिन ट्रान्सलेशन]]
[[ms:Terjemahan mesin]]
[[my:ကွန်ပျူတာဘာသာပြန်စနစ်]]
[[nl:Computervertaling]]
[[nn:Maskinomsetjing]]
[[no:Maskinoversettelse]]
[[oc:Traduccion automatica]]
[[pl:Tłumaczenie automatyczne]]
[[pt:Tradução automática]]
[[ro:Traducere automată]]
[[ru:Машинный перевод]]
[[sc:Tradutzione automàtica]]
[[simple:Machine translation]]
[[sk:Strojový preklad]]
[[sl:Strojno prevajanje]]
[[sr:Машинско превођење]]
[[sv:Maskinöversättning]]
[[tg:Тарҷумаи мошинӣ]]
[[th:การแปลภาษาด้วยเครื่อง]]
[[uk:Машинний переклад]]
[[vi:Dịch tự động]]
[[wuu:机器翻译]]
[[zh:机器翻译]]
[[zh-yue:機械翻譯]]

20:30, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

இயந்திர மொழிபெயர்ப்பு அல்லது பொறிவழி மொழிபெயர்ப்பு (Machine translation) என்பது கணினி அல்லது ஓர் இயந்திரத்தால் (பொறியால்) மாந்தர்களின் இயல்மொழி ஒன்றில் இருந்து மற்றொரு இயல்மொழிக்குத் தானியங்கியாய் மொழிபெயர்ப்பது.

இன்று பெரும்பாலும் கணினிவழியாகத் தக்க மென்கலத்தைப் (மென்பொருளைப்) பயன்படுத்தி எழுத்துவடிவில் உள்ள உரையையோ, பேச்சையோ ஒருமொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது ஆகும்.

இது தொன்பழங்காலத்தில் இருந்து வரும் பொதுவான மொழிபெயர்ப்புக் கலையின் ஒரு கூறாகவும், தற்கால கணிப்பீட்டு மொழியியலில் (computational linguistics) ஒரு முக்கிய உள்துறையாகவும் இருக்கும் ஒரு துறை. கணினியின் துணையால் மாந்தர்களும் சேர்ந்து உருவாக்கும் கூட்டு மொழிபெயர்ப்பு ஆகிய இயந்திரத்துணையோடு செய்யும் மாந்த மொழிபெயர்ப்பு (machine-aided human translation, MAHT) என்பது போன்ற துறைகளில் இருந்து சற்று வேறுபட்ட துறை.

ஒரு மொழியில் கூறப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும், இன்னொரு மொழியில் அதே பொருள் சுட்டும் சொற்களை ஈடாக இடுவதால் மட்டும் மொழிபெயர்ப்பு நிறைவு தருவதாக அமைவதில்லை. ஒரு மொழியிலே பல சொற்கள் சேர்ந்து அதில் முழுப்பொருள் தரும் ஒரு சொற்றொடராகும் முறையானது மற்றொரு மொழியில் வேறு அடுக்கில் அல்லது வரன்முறையில் வந்து ஈடான சொற்றொடராகும். எளிய எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் "She saw Murugan in the shop." என்னும் சொற்றொடர், தமிழில் "அவள் முருகனைக் கடையில் கண்டாள்" என்று மொழிபெயர்க்கப்படும் போது, தமிழில் வினைச்சொல்லாகிய (வினைமுற்று) "கண்டாள்" என்பது கடைசியாக வருவதும், ஆங்கிலத்தில் saw என்னும் வினைச்சொல் இரண்டாவதாக வருவதையும் பார்க்கலாம். தமிழில் "முருகனை" என்று இரண்டாம் வேற்றுமையாகிய என்பதைச் சேர்த்தும், "in the shop" என்பது தமிழில் மாற்றப்பெறும்பொழுது, "கடையில்" என்று தமிழின் ஏழாம் வேற்றுமையாகிய "இல்" என்பதைக் "கடை" என்பதோடு சேர்த்தும் மொழி பெயர்க்க வேண்டும். இவ்வாறான மாற்றங்களைத் தானியங்கியாய் இடத்திற்கு ஏற்றவாறு பொருள் மாறுபடாமல் ஓர் இயந்திரத்தால் அல்லது கணினியால் செய்வது இயந்திர மொழிபெயர்ப்பாகும்.

வரலாறு

ஓர் இயந்திரத்தைப் பயன்படுத்தி மொழிப்யர்ப்புச் செய்யலாம் என்னும் கருத்து, முதன் முதல் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரான்சிய அறிவியலாளர் இரெனே இடேக்கார்ட்டு அவர்களால் 1629 இல் முன் வைக்கப்பட்டது[1]. நவம்பர் 20, 1629 இல் டேக்கார்ட் பியர் மெர்சென் (Pierre Mersenne) என்பாருக்கு எழுதிய மடலில் பொதுமொழி (univeral language) என்னும் கருத்தை முன் வைத்தார்; அதன்படி எல்லா மொழிகளிலும் ஒரு சொற்கருத்தைக் கூறும் சொற்களைப் பொதுமொழியில் ஒரு குறியீடு (தனியான எண் போன்ற ஒன்றைத்) தந்து, அதனையே எல்லா மொழிகளிலும் இட்டு, இயந்திரத்தைக் கொண்டு சொல்லுக்குச் சொல் மொழி பெயர்க்கலாம் என்னும் கருத்து நிலவியது. இதனைப் பயன்படுத்தி 1661 இல் பெக்கர் (Becher) என்பார் 10,000 இலத்தீன் சொற்கள், சொற்கூறுகளுக்குக் குறியீடுகள் தந்து அகராதியையே உருவாக்கினார். ஆனால் கிரேக்கம் , எபிரேயம், இடாய்ச்சு போன்ற மொழிகளுக்கும் தரவில்லை. சொற்றொடர் சிக்கல்கள் பற்றியவற்றையும் எதிர்கொள்ளவில்லை. இது போல சசன் வில்க்கின்சு (John Wilkins)(1668) மற்றும் பலர் இந்தப் பொதுமொழிக் கருத்து பற்றி கருத்துகள் முன்வைத்துள்ளனர். சூலை 22, 1933 இல் அருமேனியப் பின்புலம் உள்ள பிரான்சிய பொறியியலாளர் சியார்ச்செசு ஆர்ட்ஃசுரூனி (Georges Artsrouni) என்பாருக்கு மொழிபெயர்ப்பி இயந்திரம் ஒன்றிற்கு புத்தாக்க உரிமம் (patent) வழங்கப்பட்டது[1].

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

  1. 1.0 1.1 Hutchins, W. John (1986). Machine Translation:Past, Present, Future. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85312-788-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயந்திர_மொழிபெயர்ப்பு&oldid=1350984" இலிருந்து மீள்விக்கப்பட்டது