தூக்க விறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: nl:Ochtenderectie
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:شق صبحگاهی
வரிசை 44: வரிசை 44:
[[en:Nocturnal penile tumescence]]
[[en:Nocturnal penile tumescence]]
[[es:Tumescencia peneal nocturna]]
[[es:Tumescencia peneal nocturna]]
[[fa:شق صبحگاهی]]
[[fr:Tumescence pénienne nocturne]]
[[fr:Tumescence pénienne nocturne]]
[[ja:朝立ち (生理現象)]]
[[ja:朝立ち (生理現象)]]

11:36, 17 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

தூக்க விறைப்பு அல்லது இரவுத் தூக்க ஆண்குறி விறைப்பு (Nocturnal penile tumescence (NPT)) என்பது ஆண்கள் உறங்கும் வேளையில் இயல்பாகவே ஏற்படும் ஆண்குறி விறைப்பு ஆகும். உடலியக்க விறைப்புக் கோளாறு இல்லாத எல்லா ஆண்களுக்கும் பொதுவாக இரவில் இரண்டு அல்லது மூன்று முறை இது நேரும்[1]. பெரும்பாலும் இது விரைந்த கண் இயக்க நிலைத் (REM - Rapid Eye Movement) தூக்கத்தில் தான் நிகழும்.

இயல்பான ஒன்றே

இரவில் ஆண்குறி விறைப்பது அவமானப்படத்தக்க ஒன்றோ அல்லது அஞ்சத்தக்க ஒன்றோ அன்று. இது ஒரு ஆண்மகனின் ஆண்மைத்தன்மைக்குக் கட்டியங் கூறுவதும் பாலியல் நலத்தை (sexual health) உறுதிபடுத்துவதுமான நிகழ்வாகும்.

விறைப்புக் கோளாறுகள்

விறைப்புக் கோளாறுகள் (erectile dysfunctions) இருவகைப்படும். அவை,

  1. உடலியக்க விறைப்புக் கோளாறு,
  2. உளவியல் விறைப்புக் கோளாறு என்பனவாகும்.

இவ்விரண்டையும் வேறுபடுத்தினால் தான் உரிய மருத்துவம் தர முடியும். இதற்கு உறக்க விறைப்பு உதவுகிறது.

உடலியக்க விறைப்புக் கோளாறு

உடலியக்க விறைப்புக் கோளாறு (physiological erectile dysfunction) இருக்குமாயின் உறக்க விறைப்பும் இருக்காது. உடலுறவின் போதும் விறைப்பு இருக்காது.

உளவியல் விறைப்புக் கோளாறு

உளவியல் விறைப்புக் கோளாறு இருப்பின் (psychological erectile dysfunction) உடலுறவின் போது பதட்டம், பயம் போன்ற காரணங்களால் விறைப்பு இருக்காது. ஆனால் உறங்கும் போது இயல்பான விறைப்பு இருக்கும்.

உறுதி செய்தல்

இரு வகை விறைப்புக் கோளாறுகளையும் வேறுபடுத்த வேண்டுமாயின் உறக்க விறைப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம். இதன் பொருட்டு மீள்தன்மை (elastic) உள்ள கருவி ஒன்றை நோயரின் ஆண்குறியைச் சுற்றி உறங்கும் முன் பொருத்துவர். இக் கருவி ஆண்குறியின் சுற்றகல (girth) வேறுபாட்டை கணிணிக்குத் தெரிவிக்கும். இத்தகவலை ஆய்வதன் மூலம் உறக்க விறைப்பை உறுதி செய்யலாம்.

உண்டாகும் விதம்

பான்கிராஃப்ட (Bancroft (2005)) என்பவரின் கருதுகோளின் [2] படி மூளையின் நீலப்பகுதி (locus ceruleus) என்ற இடத்தில் உள்ள நார்அட்ரினலின் (noradrenergic) சுரக்கும் நரம்பு செல்கள் மனிதன் விழிப்போடிருக்கும் போது ஆண்குறி விறைப்பைத் தடைசெய்கின்றன. விரைந்த கண் இயக்கத் துயில் நிலையில் இந்த நரம்பு செல்கள் நார்அட்ரினலினை வெளியேற்றுவது தடைபடுகிறது. ஆகவே டெஸ்டோஸ்டீரோன் தொடர்புடைய கிளர் செயலால் தூண்டப்பட்டு ஆண்குறி விறைப்படைகிறது. சிறுநீர்ப்பை (urinary bladder) நிரம்பியிருப்பதுவும் உறக்க விறைப்பிற்கு ஒரு காரணமாகக் கருதப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "Tests for Erection Problems". WebMD, Inc. பார்க்கப்பட்ட நாள் 2007-03-03. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. Bancroft, J. (2005). "The endocrinology of sexual arousal," Journal of Endocrinology, 186:411-427

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூக்க_விறைப்பு&oldid=1326615" இலிருந்து மீள்விக்கப்பட்டது