ஈருறுப்புச் செயலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி தானியங்கி இணைப்பு: lv:Bināra operācija
வரிசை 42: வரிசை 42:
[[ko:이항연산]]
[[ko:이항연산]]
[[ku:Kiryar (matematîk)]]
[[ku:Kiryar (matematîk)]]
[[lv:Bināra operācija]]
[[ml:ദ്വയാങ്കസംക്രിയ]]
[[ml:ദ്വയാങ്കസംക്രിയ]]
[[ms:Operasi dedua]]
[[ms:Operasi dedua]]

02:37, 12 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

கணிதத்தில், ஈருறுப்புச் செயலி அல்லது ஈருறுப்புச் செயல் (Binary operation) என்பது இரு செயலேற்பிகளைக் (operands) கொண்டு கணக்கிடும் ஒரு செயலாகும். எண்கணிதத்தின் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய செயல்கள் ஈருறுப்புச் செயலிக்கு எளிய உதாரணங்களாகும்.

கணம் Sன் மீதான ஒரு ஈருறுப்புச் செயலியானது, கார்ட்டீசியன் பெருக்கற்பலன் SxS லிருந்து Sக்கு வரையறுக்கப்பட்ட ஒரு ஈருறுப்புத் தொடர்பாகும்.(binary relation)

f பகுதிச்சார்பாக இருந்தால், இச்செயலானது பகுதிச்செயல் எனப்படும். (partial operation) எடுத்துகாட்டாக, எந்த ஒரு மெய்யெண்ணையும் பூச்சியத்தால் வகுக்க முடியாது என்பதால் மெய்யெண்களின் வகுத்தல் செயலானது ஒரு பகுதிச்செயலாகும்.

சில சமயங்களில், குறிப்பாக கணினி அறிவியலில், ஈருறுப்புச்செயலி என்பது ஈருறுப்புச் சார்பினைக் குறிக்கும். f இன் மதிப்பானது S கணத்தின் உறுப்பாகவே அமைவதால் ஈருறுப்புச் செயலி அடைவுப் பண்பு கொண்டதாக அமைகிறது.

நுண்புல இயற்கணித்தில், இயற்கணித அமைப்புகளான குலங்கள், ஒற்றைக்குலம், அரைக்குலம், வளையம் போன்றவற்றில் ஈருறுப்புச் செயலி முக்கியப் பங்கு வகிக்கிறது. பல ஈருறுப்புச் செயலிகள் சேர்ப்பு மற்றும் பரிமாற்றுப் பண்புகளைக் கொண்டுள்ளன. மெய்யெண் கூட்டல் மற்றும் பெருக்கல் இரண்டும் சேர்ப்பு மற்றும் பரிமாற்றுப் பண்புகள் கொண்ட ஈருறுப்புச் செயலிகள் ஆகும். மெய்யெண் கழித்தல் மற்றும் வகுத்தல் இரண்டும் சேர்ப்பு மற்றும் பரிமாற்றுப் பண்புகள் இல்லாத ஈருறுப்புச் செயலிகள். பல ஈருறுப்புச் செயலிகள் முற்றொருமை உறுப்புகளைம் நேர்மாறு உறுப்புகளைம் கொண்டிருக்கும்.

பொதுவாக ஈருறுப்புச்செயலிகள், ab, a + b, a · b ... என உள்ளொட்டுக் குறியீட்டுமுறையில் (infix notation) எழுதப்படுகின்றன. சில சமயங்களில் செயலி இல்லாமல் ab எனவும் எழுதப்படுகின்றன. வழக்கமாக அடுக்குகள், இரண்டாவது செயலுட்படுத்தியை மேல் குறியீடாகக் கொண்டு, அதற்கான செயலி (^) இல்லாமல்தான் எழுதப்படுகின்றன. சில சமயங்களில் ஈருறுப்புச்செயலிகளில் முன்னொட்டு (prefix) அல்லது பின்னொட்டுக் (postfix) குறியீட்டு முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈருறுப்புச்_செயலி&oldid=1275524" இலிருந்து மீள்விக்கப்பட்டது