அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sn:Matongerwo eNyika
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: vec:Pułìtega
வரிசை 164: வரிசை 164:
[[ur:سیاست]]
[[ur:سیاست]]
[[uz:Siyosat]]
[[uz:Siyosat]]
[[vec:Pułitega]]
[[vec:Pułìtega]]
[[vi:Chính trị]]
[[vi:Chính trị]]
[[war:Politika]]
[[war:Politika]]

04:59, 19 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஐக்கிய நாடுகள் சபையின் பொது மன்றத்தில் உறுப்பு நாடுகளின் தூதுவர்கள் உலக விடயங்கள் குறித்து கலந்துரையாடுவர்.

அரசியல் என்பது மக்கள் குழுக்களில் முடிவெடிவெடுக்கும் முறையைக் குறிக்கும் சொல். பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் உண்மையில் அலுவலக, கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழு ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.

அரசறிவியல், அரசியற் கல்வி என்பது அரசியல் நடத்தை குறித்து கற்பதுடன், அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அதனைப் பயன்படுத்துதல் தொடர்பாகவும் ஆய்வு செய்கின்றது.

வரைவிலக்கணங்கள்

அரசியல் என்பது என்ன என்பது பற்றிப் பலர் பல கோணங்களிலிருந்து பார்த்து வரைவிலக்கணம் கொடுத்துள்ளார்கள். இவ் வரைவிலக்கணங்களுள் சில கீழே தரப்பட்டுள்ளன.

  • அகரமுதலி: அரசியல் என்பது "ஆட்சி செய்வதற்குரிய கலையும், அறிவியலும் ஆகும்."
  • பாடப்புத்தகம்: குறிப்பாக, இது "பொதுத் திட்டங்களுக்காக, மக்கள் ஆதரவைத் திரட்டுவதன்மூலம், முரண்பாடுகளைத் தீர்க்கும் ஒரு நடைமுறையாகும்". - அரசு மற்றும் அரசியலுக்கான ஒரு அறிமுகம், டிக்கர்சனும் பிளானகனும் (Dickerson and Flanagan).
  • கோட்பாட்டுப் பார்வை: "என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி யார் பெறுகிறார்கள்" என்பதே அரசியல் என்கிறார், ஹரல்ட் லாஸ்வெல் என்பார்.
  • அரசியலாளர்:
    • மாவோ செடாங் கூறியது: " அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போர். போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்"
    • ஓட்டோ வொன் பிஸ்மாக்: "அரசியல் என்பது சாத்தியப் பாட்டுக்குரிய ஒரு கலையாகும்"

இயற்கை அரசு

1651 ஆம் ஆண்டில், தோமஸ் ஹோப்ஸ் (Thomas Hobbes) என்பவர் தனது புகழ்பெற்ற லெவியாதன் (Leviathan) என்னும் நூலை வெளியிட்டார். அதிலே, அரசின் தோற்றத்தை நியாயப்படுத்துவதற்கான தொடக்ககால மனித வளர்ச்சியின் மாதிரி (model) ஒன்றை முன் மொழிந்தார். இலட்சியத் தன்மை கொண்ட இயற்கையின் அரசு பற்றிய அவரது விளக்கத்தின்படி, ஒவ்வொரு மனிதனும், இயற்கையின் வளங்கள் தொடர்பில் சம உரிமை கொண்டிருந்ததுடன், அவ்வளங்களை அடைவதற்கு எத்தகைய வழியையும் பயன்படுத்துவதற்கான சுதந்திரத்தையும் பெற்றிருந்தார்கள். இவ்வாறான ஒரு ஒழுங்கு, எல்லோருக்கும் எதிராக எல்லோரும் போர் செய்யும் ஒரு நிலையை உருவாக்கியதாக ஹோப்ஸ் கூறுகிறார். மேலும், குறிப்பிட்ட பாதுகாப்புக்காக, ஒரு சமூக ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டு முழு அளவு உரிமையை விட்டுக்கொடுக்கவும் மனிதர்கள் தயாராக இருந்தார்கள் என அவர் குறிப்பிடுகின்றார். இத்தகைய சண்டைப் போக்குகளுக்கான தீர்வு, ஒரு மையப்படுத்தப்பட்ட ஆதிக்கவாத அரசொன்றை உருவாக்கமே என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்வரசையே அவர் லெவியாதன் என்று குறிப்பிட்டார்.

வெளி இணைப்புகள்

அரசியல் செய்தி தினமலர்

தமிழ் வலைப்பதிவர்கள் எழுதியது

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசியல்&oldid=1237375" இலிருந்து மீள்விக்கப்பட்டது