எல்விஸ் பிரெஸ்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hy:Էլվիս Փրեսլի
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ia:Elvis Presley
வரிசை 78: வரிசை 78:
[[hu:Elvis Presley]]
[[hu:Elvis Presley]]
[[hy:Էլվիս Փրեսլի]]
[[hy:Էլվիս Փրեսլի]]
[[ia:Elvis Presley]]
[[id:Elvis Presley]]
[[id:Elvis Presley]]
[[io:Elvis Presley]]
[[io:Elvis Presley]]

04:40, 18 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

எல்விஸ் பிரெஸ்லி
1970ல் எல்விஸ்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி[1]
பிற பெயர்கள்எல்விஸ், த கிங், ராக் அன்ட் ரோலின் மன்னன் [2]
பிறப்பு(1935-01-08)சனவரி 8, 1935
Tupelo, Mississippi, ஐஅ
பிறப்பிடம்மெம்பிஸ், தென்னசி, ஐக்கிய அமெரிக்கா
இறப்புஆகத்து 16, 1977(1977-08-16) (அகவை 42)
மெம்பிஸ், தென்னசி, ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ராக் அண்ட் ரோல்
ராக்கபிலிட்டி
ரிதம் அண்ட் புளூஸ்
நாட்டுப்புற ராக்
தொழில்(கள்)பாடகர், நடிகர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு, கிட்டார், பியானோ
இசைத்துறையில்1953–1977
வெளியீட்டு நிறுவனங்கள்சன், ஆர்சிஏ விக்டர்
இணையதளம்Elvis.com

எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி (Elvis Aaron Presley - ஜனவரி 8, 1935 - ஆகஸ்ட் 16, 1977) ஒரு அமெரிக்க இசைக் கலைஞரும், நடிகரும் ஆவார். ஒரு பண்பாட்டுச் சின்னமாக விளங்கிய இவர், "ராக் அண்ட் ரோலின் மன்னன்" எனப் போற்றப்பட்டார்.

1954 ஆம் ஆண்டில் எல்விஸ் பிரெஸ்லி இசைத்துறைக்குள் நுழைந்தார். அக்காலத்தில் "ரிதம் அண்ட் புளூஸ்" என்னும் இசை வடிவமும், நாட்டுப்புற இசையும் கலந்து உருவான, "ராக் அண்ட் ரோல்" இசையின் தொடக்க வடிவமான "ராக்கபிலிட்டி" இசை நிகழ்ச்சிகளை நடத்திய முதல் கலைஞர்களுள் இவரும் ஒருவராக இருந்தார். ஏற்கெனவே இருக்கும் பாடல்களை, "கறுப்பர்" "வெள்ளையர்" இசைகளைக் கலந்து புதுமையாகக் கொடுத்தது இவரைப் புகழ்பெற வைத்ததுடன் சர்ச்சைக்கு உரியதாகவும் ஆக்கியது. பிரெஸ்லிக்குப் பல்வகைத் திறன் கொண்ட குரல் வாய்த்திருந்தது. இதனால் இவர் கிறிஸ்தவ இசை (gospel music), புளூஸ் இசை (blues music), இசைக் கவி (ballards), மக்கள் இசை (pop music) போன்ற பல வடிவங்களிலும் பாடல்களைப் பாடி வெற்றிபெறக் கூடியதாக இருந்தது.

பிரெஸ்லியின் 31 திரைப்படங்களில் பெரும்பாலானவை 1960 களில் வெளிவந்தன. இவற்றுட் பலவற்றுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்கவில்லை எனினும் இவை வணிக அடிப்படையில் வெற்றி பெற்ற இசைப் படங்களாக இருந்தன. 1968 இல் பிரெஸ்லி மீண்டும் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் தொலைக்காட்சிச் சிறப்பு நிகழ்ச்சிக்காக மீண்டும் மேடை இசை நிகழ்ச்சிகளுக்குத் திரும்பினார். இதன் பின் அமெரிக்கா முழுவதும், சிறப்பாக லாஸ் வெகாசில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

இவரது இத்துறையில் இருந்த காலம் முழுவதும் நிகழ்ச்சிகளுக்கு வந்த மக்கள் தொகையிலும், தொலைக்காட்சித் தர நிலைகளிலும், இசைத்தட்டு விற்பனையிலும் சாதனைகள் நிகழ்த்தினார். மக்கள் இசை வரலாற்றில் விற்பனையிலும், செல்வாக்கிலும் முன்னிலையில் இருந்த கலைஞர்களில் இவர் ஒருவராவார். உடல் நலப் பிரச்சினைகளாலும், போதை மருந்துக்கு அடிமையானதாலும், வேறு காரணங்களாலும் இவர் 42 ஆவது வயதிலேயே காலமானார்.

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Aaron என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "Elvis Presley 1953–1955 : The Hillbilly Cat". பார்க்கப்பட்ட நாள் 2008-08-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்விஸ்_பிரெஸ்லி&oldid=1027002" இலிருந்து மீள்விக்கப்பட்டது