சியாகி முகாய்
சியாகி முகாய் | |
---|---|
நாஸ்டா/ஜாக்சா விண்வெளி வீராங்கனை | |
நிலை | ஓய்வு பெற்றவர் |
பிறப்பு | மே 6, 1952 தட்பேசி, குன்மா மாகாணம், யப்பான்[1] |
வேறு பணிகள் | மருத்துவர் |
விண்வெளி நேரம் | 23d 15h 39m |
தெரிவு | 1985 நாஸ்டா குழு |
பயணங்கள் | STS-65, STS-95 |
திட்டச் சின்னம் |
சியாகி முகாய் (Chiaki Mukai, முகாய் சியாகி, பிறப்பு 6, மே, 1952) என்பவர் ஒரு மருத்துவர் சாக்சா விண்வெளி வீராங்கனை ஆவார்.[2] விண்வெளிப் பயணம் மேற்கொண்ட முதல் யப்பானிய பெண், இரண்டு முறை விண்வெளியில் பறந்த முதல் யப்பானிய குடிமகள், விண்வெளிப் பயணம் மேற்கொண்ட முதல் ஆசியப் பெண் என்ற சாதணைகளைப் புரிந்தார்.[1] இரண்டுமே விண்ணோட்ட பயணங்களாகும்; இவரது முதல் பணியான எஸ். டி. எஸ் -65 இக்காக 1994 யூலையில் கொலம்பியா விண்வெளி ஓடத்தில் முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். இவரது இரண்டாவது விண்வெளிப் பயணமானது எஸ். டி. எஸ். -95 பணிக்காக டிஸ்கவரி விண்வெளி ஓடத்தில் 1998 இல் பயணம் மேற்கொண்டார். மொத்தத்தில் இவர் 23 நாட்களை விண்வெளியில் செலவிட்டார்.
முகாய் 1985 இல் யப்பானிய தேசிய விண்வெளி முகமையான நாஸ்டாவால் (இப்போது ஜாக்ஸா என்று அழைக்கப்படுகிறது) விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்னர், இவர் யப்பானின் மிகப் பழமையான பல்கலைக்கழகமான கியோ பல்கலைக்கழகத்தில் இதய அறுவை சிகிச்சை துறையில் உதவி பேராசிரியராக இருந்தார். 2015 ஆம் ஆண்டில், இவர் தோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவரானார்.[3] கூடுதலாக, அவர் ஜாக்ஸா தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருந்தார்.[2]
துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்
[தொகு]சியாகி முகாய் கன்மா மாகாணத்தின் தத்பயாசியில் பிறந்தார். 1971 இல் தோக்கியோவில் உள்ள கியோ மகளிர் மூத்த உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவர் 1977 இல் கியோ பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார்; 1988 இல் அதே கல்லூரியில் உடலியங்கியலில், முனைவர் பட்டம் பெற்றார்; அந்தப் பல்கலைக் கழகத்தில் இதய அறுவை சிகிச்சையில் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற சிறப்பை பெற்றார்; 1989 இல் யப்பான் அறுவை சிகிச்சை சங்கத்தால் இதய அறுவை சிகிச்சை நிபுணர் என இவருக்கு சான்றளிக்கபட்டது.[1]
முகாய் அமெரிக்க விண்வெளி மருத்துவ சங்கம்; யப்பான் சொசைட்டி ஆஃப் மைக்ரோ கிராவிட்டி (நுண் ஈர்ப்பு) அப்ளிகேஷன்ஸ்; யப்பான் சொசைட்டி ஆஃப் ஏரோஸ்பேஸ் அண்ட் என்விரான்மெண்டல் மெடிசின்; இதய மற்றும் நெஞ்சக்கூடு அறுவை சிகிச்சைக்கான யப்பானிய சங்கம்; ஜப்பான் அறுவை சிகிச்சை சங்கம்; போன்றவற்றில் உறுப்பினராக உள்ளார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் மகியோ முகாய், எம். டி., பி. எச். டி என்பவரை மணந்தார். இவரது பொழுதுபோக்கு அம்சங்களாக மலைச்சரிவு பனிச்சறுக்கு, மீன்பிடித்தல், ஸ்கூபா டைவிங், டென்னிஸ், கோல்ஃப், ஒளிப்படம் எடுத்தல், அமெரிக்க இலக்கியம் வாசித்தல், பயணம் போன்றவை உள்ளன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "CHIAKI MUKAI (M.D., PH.D.), JAXA ASTRONAUT (PAYLOAD SPECIALIST)" (PDF). NASA. October 2003. பார்க்கப்பட்ட நாள் April 14, 2021.
- ↑ 2.0 2.1 "Chiaki Mukai (M.D., Ph.D.)". JAXA. May 2, 2016. பார்க்கப்பட்ட நாள் November 23, 2018.
- ↑ Project Professor Chiaki Mukai's inauguration as Vice President of the Tokyo University of Science Tokyo University of Science