சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம்
Reaching for the skies, exploring space | |
உரிமையாளர் | சப்பான் |
---|---|
நிறுவியது | அக்டோபர் 1, 2003 (Successor agency to NASDA 1969–2003, ISAS 1981–2003 and NAL 1955–2003) |
தலைமையகம் | சொஃபு, டோக்கியோ |
முதன்மை விண்வெளி நிலையம் | தனேகஷிமா விண்வெளி மையம் |
குறிகோள் | One JAXA |
மேலாளர் | கெய்ஜி டசிகாவா |
செலவு | ¥229பில்லியன்/ $2.46 பில்லியன் (FY2010)[1] |
இணையதளம் | www.jaxa.jp |
ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம்(JAXA) என்பது ஜப்பானின் தேசிய விண்வெளி ஆய்வுக்கான நிறுவனமாகும். இது அக்டோபர் 1, 2003 அன்று மூன்று முன்னைய நிறுவனங்களின் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது. அவை, ஜப்பானிய விண்வெளி விஞ்ஞானத்துக்கான நிலையம்(ISAS), ஜப்பானிய தேசிய விண்வெளி ஆய்வகம்(NAL), ஜப்பானிய தேசிய விண்வெளி அபிவிருத்தி முகவரகம்(NASDA) என்பனவாகும். இந்நிறுவனம், அந்நாட்டு கல்வி, கலாசார, விளையாட்டு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சு ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது. ஜக்சாவானது செயற்கைக்கோள்களை ஏவுதல், ஆய்வுசெய்தல், தொழில்நுட்ப அபிவிருத்தி ஆகியவற்றுக்குப் பொறுப்பாகவுள்ளது. இவை தவிர விண்கல் ஆய்வு, சந்திரனுக்கான மனிதப் பயணங்கள் போன்ற முன்னேற்றகரமான செயற்திட்டங்களையும் நடைமுறைப் படுத்துகின்றது.
வரலாறு
[தொகு]அக்டோபர் 1, 2003 அன்று சப்பானிய விண்வெளி விஞ்ஞானத்துக்கான நிலையம்(ISAS), சப்பானிய தேசிய விண்வெளி ஆய்வகம்(NAL) மற்றும் சப்பானிய தேசிய விண்வெளி அபிவிருத்தி முகவரகம்(NASDA) ஆகியவற்றை இணைத்து ஜக்சா உருவாக்கப்பட்டது.
இணைப்புக்கு முன், ISASஆனது விண்வெளி மற்றும் கோள்கள் பற்றிய ஆய்வுக்குப் பொறுப்பாகவும், NALஆனது பறத்தல் சம்பந்தமான ஆய்வுகளுக்குப் பொறுப்பாகவும் இருந்தன. அக்டோபர் 1, 1969 அன்று உருவாக்கப்பட்ட NASDAஆனது, ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள் ஆகியவற்றை உருவாக்கியதோடு சப்பானிய பரிசோதனைக் கூறுகளையும் அமைத்தது. NASDAவின் பழைய தலைமையகம், தற்போது தனேகஷிமா விண்வெளி மையம் அமைந்துள்ள, தனேகஷிமா தீவில் அமைந்திருந்தது. இத்தீவு கியூஷூ தீவிலிருந்து 115கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்க விண்வெளி ஓடங்களில் பயணித்த சப்பானிய விண்வெளி வீரர்கள் NASDAவிலேயே பயிற்சி பெற்றனர்.[2]
ஏவுகணைகள்
[தொகு]ஜக்சா வானிலைச் செய்மதிகள், இயந்திரவியல் பரிசோதனைச் செய்மதிகள் போன்றவற்றை ஏவுவதற்கு NASDAவால் பயன்படுத்தப்பட்ட H-IIA (H "டூ" A) ஏவுகணைகளைப் பயன்படுத்துகிறது. X-கதிர் வானியல் போன்ற விஞ்ஞான ஆய்வுகளுக்கு, ISASஆல் பயன்படுத்தப்பட்ட திண்ம எரிபொருள் ஏவுகணையான M-V ("மு-ஃபைவ்") ஏவுகணைகளைப் பயன்படுத்துகிறது. மேல்வளிமண்டல ஆய்வுகளுக்காக, SS-520, S-520 மற்றும் S-310 எனப்படும் ஆய்வு ஏவுகணைகளைப் பயன்படுத்துகிறது.
வெற்றிகள்
[தொகு]ஜக்சா நிறுவப்படுவதற்கு முன், ISASஆனது , 1980கள் மற்றும் 1990களில் செயற்படுத்டப்பட்ட, x-கதிர் வானியல் துறையில் வெற்றி கண்டது. சப்பானின் இன்னொரு வெற்றிகரமான திட்டம் மிக நீண்ட அடிக்கோட்டுத் தலையீடு (Very Long Baseline Interferometry (VLBI)) மற்றும் HALCA திட்டம் ஆகும். மேலும், சூரிய அவதானிப்பு மற்றும் அதன் காந்தக் கோளம் பற்றிய ஆய்வுகளும் இதன் ஏனைய வெற்றிகளாகும்.
NASDAஆனது பெரும்பாலும் தொடர்பாடல் செய்மதித் தொழிநுட்பத் துறையில் செயற்பட்டது. எவ்வாறாயினும், சப்பானின் விண்வெளித்துறை ஆரம்பிக்கப்பட்ட பின், முதன்முதலில் சிவில் தொடர்பாடல் செயற்கைக்கோள் தயாரிப்புக்கான ஒப்பந்தத்தை, 2005ம் ஆண்டிலேயே சப்பானிய நிறுவனமொன்று ஏற்றுக்கொண்டது. NASDAவின் இன்னொரு முக்கிய நிகழ்வாக புவிக் காலநிலைச் செயற்கைக் கோள் ஏவுகையைக் குறிப்பிடலாம்.
2008ம் ஆண்டுக்கான, விண்வெளி ஆய்வுக்காக வழங்கப்படும் இலாபநோக்கற்ற விண்வெளி நிறுவனத்தின்(Space Foundation) ஜோன் L. ஜக் ஸ்விஜெர்ட் விருது ஜக்சாவுக்குக் கிடைத்தது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "独立行政法人宇宙航空研究開発機構の平成22年度の業務運営に関する計画(年度計画)" (PDF) (in Japanese). JAXA. பார்க்கப்பட்ட நாள் 17 April 2010.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Kamiya, Setsuko, "Japan a low-key player in space race", Japan Times, 30 June 2009, p. 3.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-02-03. பார்க்கப்பட்ட நாள் 2012-09-12.