சின்ன பச்சைப் புறா
சின்ன பச்சைப் புறா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கொலும்பிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | தெரெரான்
|
இனம்: | தெ. அபினிசு
|
இருசொற் பெயரீடு | |
தெரெரான் அபினிசு தெமிக், 1823 | |
வேறு பெயர்கள் | |
தெ. ஒ. ஹேஜினி |
சின்ன பச்சைப் புறா (Little green pigeon)(தெரெரான் ஓலாக்சு) என்பது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது . இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் ஆகும். இது தெரெரான் பேரினத்தில் உள்ள மற்ற சிற்றினங்களை விடச் சிறியது.
இந்த புறா 21 முதல் 22 செ. மீ. நீளமுடையது. ஆண் பெண் பாலின வேறுபாடுடையது. ஆண்களின் கழுத்தின் அடிப்பகுதியில் ஆரஞ்சு நிறப் திட்டுகளும் மஞ்சள் வண்ணத்தின் மீது காணப்படும். இது பெண் புறாவில் இல்லை. பெண் புறாவில் மஞ்சள் நிற அடிப்பகுதியில் ஆலிவ் பச்சை நிறத்தில் பெரிய திட்டுக்கள் காணப்படும். பிற பச்சைப் புறாக்களைப் போலவே இவையும் வித்துக்களையும் பழங்களையும் உண்ணக்கூடியவை. இவை காடுகளில் காணப்படுகின்றன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Treron olax". IUCN Red List of Threatened Species 2018: e.T22691132A130176838. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22691132A130176838.en. https://www.iucnredlist.org/species/22691132/130176838. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Oberholser, Harry C. (1924). "Descriptions of new Treronidae and other non-Passerine Birds from the East Indies". Journal of the Washington Academy of Sciences 14: 294–303. https://www.biodiversitylibrary.org/page/39702522.
- ↑ Robinson, Herbert C. (1906). "A synopsis of the birds at present known to inhabit the Malay Peninsula south of the Isthmus of Kra". Journal of the Federated Malay States Museums 1: 45–57. https://archive.org/details/journalfederate00musegoog/page/n73/mode/1up.