சித்தாமுட்டி
சித்தாமுட்டி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Malvales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | S. cordifolia
|
இருசொற் பெயரீடு | |
Sida cordifolia L. |
சித்தாமுட்டி அல்லது சிற்றாமுட்டி (Sida cordifolia) என்பது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இது மல்வசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மூலிகைத் தாவரம் ஆகும்.[1][2][3]
பெயர்கள்
[தொகு]சிற்றாமுட்டிக்கு சிறுந்தொட்டி, சிறுந்தொட்டை, குறுந்தொட்டி, குறுந்தோட்டி ஆகிய வேறுபெயர்கள் உள்ளன. தட்டி என்பதற்கு கேடயம் என்ற பொருளில், ‘நோய்களுக்கான கேடயமாக’ இருப்பதால், குறுந்‘தட்டி’ என்ற பெயரும் உண்டு. பேராமுட்டி எனும் வகையிலிருந்து வேறுபடுத்திக் காட்ட, ‘சிறு’ எனும் முன்னொட்டு சேர்ந்திருக்கிறது.[4] மேலும் இது சேங்கன். மம்மட்டி, தெங்கைப் பூண்டு எனும் பெயர்களிலும் அறியப்படுகின்றது.
வளரும் இயல்பு
[தொகு]சித்தாமுட்டி மணல் கலந்த பாறையுள்ள இடங்களில் நன்கு வளரும். காடுகளில் புதர்கள் அதிகமாக உள்ள இடங்களில் அதிகம் காணப்படும். இது நேராக வளரும் செடி. தரிசு நிலங்களிலும், வேலியோரங்களிலும் சாதாரணமாகக் காணப்படும். இதன் இதய வடிவ இலைகள் ஓரங்களில் பல்லுள்ளவை. எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். சுமார் மூன்று அடி உயரம் வரை வளரக்கூடியது. தாவரம் முழுவதும் மெல்லிய ரோம வளரிகள் காணப்படும். பூக்கள் சிறிதாக 5 இதழ்களுடன் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூக்கள் தனியாக இருக்கும் 7 எம்.எம். நீளம். வெளிநாடுகளிலு இளஞ்சிவப்பு நிறத்திலும் கூட இருக்கும். இலைகள் 2.5 x 3 3-5 செ.மீ. அகலத்திலும், 3 – 4 செ.மீ. நீளத்திலும் இருக்கும். பூக்களும் காய்களும் ஆகத்து மாதம் முதல் திசம்பர் மாதம் வரை அதிகம் காணப்படும். பூக்கள் எல்லா நாட்களிலும் தென்படும். இதன் காய்கள் சிறிதாகவும் உருண்டையாகவும் இருக்கும். சித்தாமுட்டி இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா, அமரிக்கா போன்ற நாடுகளிலு காணப்படுகிறது. இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.
பயன்கள்
[தொகு]தாதுக்கிளின் எரிச்சலை தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகப் பயன்படும். பாரிசவாதம், முகவாதம், போன்ற கடும் வாத நோய்களைத் தீர்பதற்குறிய மருந்தாகும். மது பழக்கத்திலிருந்து விடு பெற உதவுகிறது. கர்பிணிப் பெண்ணுக்ககு மருத்துவ உணவாகப் பயன்படுகிது. இதன் தைலம் முடி உதிர்வதைத் தடுக்கிறது. இது மூட்டு வலியைக் குணப்படுத்ததும் மருந்தாகவும் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sida cordifolia". Natural Resources Conservation Service PLANTS Database. USDA. பார்க்கப்பட்ட நாள் 12 November 2015.
- ↑ BSBI List 2007 (xls). Botanical Society of Britain and Ireland. Archived from the original (xls) on 2015-06-26. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
- ↑ "Invasive and Noxious Weeds". United States Department of Agriculture. பார்க்கப்பட்ட நாள் 18 July 2010.
- ↑ டாக்டர் வி.விக்ரம் குமார் (29 செப்டம்பர் 2018). "நோய்களைத் தட்டி வைக்கும் சிற்றாமுட்டி". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Caldecott, Todd (2006). Ayurveda: The Divine Science of Life. Elsevier/Mosby. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7234-3410-7. Contains a detailed monograph on Sida cordifolia (Bala) as well as a discussion of health benefits and usage in clinical practice. Available online at http://www.toddcaldecott.com/index.php/herbs/learning-herbs/394-bala பரணிடப்பட்டது 2010-10-17 at the வந்தவழி இயந்திரம்