உள்ளடக்கத்துக்குச் செல்

சிட்னி மெக்லாலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:Infobox sports personசிட்னி மைக்கேல் மெக்லாஹ்லின் (Sydney Mclaughlin) (பிறப்பு ஆகஸ்ட் 7, 1999) ஒரு அமெரிக்க தடை தாண்டும் ஓட்டம், விரைவோட்ட வீராங்கனை ஆவார். இவர் 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர். இவர் 2018 ஆம் ஆண்டில் தொழில்முறைப் போட்டிகளுக்கு வருவதற்கு ஓராண்டு முன்னதாக கென்டக்கி பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்திருந்தார்.[1] டோக்கியோ ஒலிம்பிக்கில் இறுதி ஓட்டத்தில் ஆகஸ்ட் 4, 2021 அன்று மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 51.46 வினாடிகளில் தற்போதைய உலக சாதனையைப் படைத்தவர். 2020 ஐக்கிய அமெரிக்க ஒலிம்பிக் சோதனை களில் 51.90 என்ற உலக சாதனையை நிகழ்த்தியபோது அந்த நிகழ்வில் 52 வினாடிகளை முறியடித்த முதல் பெண்ணும் இவரேயாவார்.

இவர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 2020 ஐக்கிய அமெரிக்க ஒலிம்பிக் சோதனைகளில் வென்றார். இதைத் தொடர்ந்து 2020 கோடைகால ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு தங்கப் பதக்கம் வென்ற அணித்தலைவர் டலிலா முஹம்மதுவை இரண்டாவது இடத்திற்குப் பின் தள்ளினார். 2019 ஆம் ஆண்டில் உலக வாகையாளர் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் மெக்லாலின் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் 2016 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க ஒலிம்பிக் சோதனை ஓட்டப்பந்தயத்தின் போது 400 மீட்டர் தடை ஓட்டத்தில் மூன்றாமிடம் பிடித்தார். 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு அமெரிக்க தடகள அணிக்கு தகுதி பெற்ற இளைய தடகள வீராங்கனையான இவர் ஒட்டுமொத்தமாக 16 வது இடத்தைப் பிடித்தார். [2]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

சிட்னி மெக்லாலின் ஆகஸ்ட் 7, 1999 அன்று நியூ பிரன்சுவிக், நியூ ஜெர்சியில் பிறந்தார்.[3] இவர் 1984 ஒலிம்பிக் சோதனை ஓட்டப் பந்தயங்களில் 400 மீட்டரில் அரை இறுதிப் போட்டியாளரான வில்லி மெக்லாலின் மகள் ஆவார். பிப்ரவரி 2021 இல் இவரது தந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இவரது தாயார், மேரி நியூமிஸ்டர் மெக்லாலின், ஒரு உயர்நிலைப் பள்ளி அளவிலான ஓட்டப்பந்தய வீரர் ஆவார். [4] [5]

இவர் நியூ ஜெர்சியிலுள்ள துனெலனில் வளர்ந்தார். இசுகாட்ச் சமவெளியில் உள்ள யூனியன் கத்தோலிக்க பிராந்திய உயர்நிலைப் பள்ளியில் 2017 ஆம் ஆண்டின் உறுப்பினராக உள்ளார். மேலும் கல்வியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளார். [6] [7] [8] மெக்லாலின் சகோதரர் டெய்லர் மற்றும் அவர்களின் மூத்த சகோதரி மோர்கன் ஆகியோரைத் தொடர்ந்து சிறு வயதிலேயே ஓடத் தொடங்கினார். [6] மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்காகப் போட்டியிட்ட டெய்லர், 2016 ஐஏஏஎஃப் உலக 20 வயதிற்குக் கீழானோருக்கான வாகையாளர் போட்டியில் 400 மீ தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இவருடைய இளைய சகோதரர் ரியான், தனது மூத்த உடன்பிறப்புகளை யூனியன் கத்தோலிக்கில் ஒரு தனித்துவமான தோற்றமாக முன் மாதிரியாக எடுத்துக் கொண்டார். [9]

சர்வதேச போட்டிகள்

[தொகு]
அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது
ஆண்டு போட்டி நிலை நிகழ்வு இடம் நேரம் குறிப்புகள்
2015 உலக இளைஞர் சாம்பியன்ஷிப் 1 வது 400 மீ தடை ஓட்டம் காலி, கொலம்பியா 55.94 CR
2016 ஒலிம்பிக் விளையாட்டுகள் 16 வது 400 மீ தடை ஓட்டம் ரியோ டி ஜெனிரோ, பிரேசில் 56.22
2019 உலக சாம்பியன்ஷிப் 2 வது 400 மீ தடை ஓட்டம் தோஹா, கத்தார் 52.23 PB, #3 எல்லா நேரமும்
1 வது 4 × 400மீ தொடரோட்டம் 3: 18.92 WL, 48.8 பிளவு
2021 ஒலிம்பிக் விளையாட்டுகள் 1 வது 400 மீ தடை ஓட்டம் டோக்கியோ, ஜப்பான் 51.46 ஒலிம்பிக் சாதன மற்றும் உலக சாதனை
1 வது 4 × 400 மீ தொடரோட்டம் 3: 16.85

மேற்கோள்கள்

[தொகு]

  Who is Sydney McLaughlin, and Why is She Famous? பரணிடப்பட்டது 2022-07-26 at the வந்தவழி இயந்திரம்

  1. Boylan-Pett, Liam (October 24, 2017). "The Track Phenom Who Chose College Over Riches". Bleacher Report. பார்க்கப்பட்ட நாள் October 24, 2017.
  2. "Sydney McLaughlin Biography, Olympic Medals, and Age". Olympics.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-04.
  3. Leiker, Emily. "Sydney McLaughlin breaks own world record at Tokyo Olympics, wins gold". USA TODAY (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-04.
  4. NJ.com, Steve Politi | NJ Advance Media for (2021-07-30). "Tokyo Olympics: Cheering Sydney McLaughlin, with every beat of his new heart | Politi". nj (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-04.
  5. Brady, Erik. "Erik Brady: An Olympic athlete's roots run deep in Western New York". The Buffalo News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-05.
  6. 6.0 6.1 "Track: Union Catholic siblings Taylor and Sydney McLaughlin were born to run". http://highschoolsports.nj.com/news/article/-4400755535891241147/indoor-track-union-catholic-siblings-taylor-and-sydney-mclaughlin-were-born-to-run/. 
  7. Konecky, Chad. "Sydney McLaughlin wins Gatorade National Track & Field Athlete of the Year". http://usatodayhss.com/2016/sydney-mclaughlin-wins-gatorade-national-track-field-athlete-of-the-year/. 
  8. Staff.
  9. NJ.com, Patrick Lanni | NJ Advance Media for (2017-05-20). "Not afraid of family legacy, UC's Ryan McLaughlin adds to county title haul". nj (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்னி_மெக்லாலின்&oldid=3623878" இலிருந்து மீள்விக்கப்பட்டது