சிங்களாந்தபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்களாந்தபுரம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 10,422 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
வாரச்சந்தை-பின்புறத்தில் மாரியம்மன் கோவில்

சிங்களாந்தபுரம் (ஆங்கிலம்: Singalandapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இங்கு வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது.

2019 நடந்த உள்ளாட்சித் தேர்தலில் புஷ்பா மகுடீஸ்வரன் சிங்களாந்தபுரம் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,422 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 5345 ஆண்கள், 5077 பெண்கள் ஆவார்கள். இதில் மக்களின் சராசரி கல்வியறிவு 61.53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிங்களாந்தபுரம் மக்கள் தொகையில் 11.78% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

புவியியல்[தொகு]

சிங்களாந்தபுரத்தில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலை 39.1˚ செல்சியஸ், குறைந்த வெப்பநிலை 16.8˚ செல்சியஸ்.இவ்வூரின் அமைவிடம் 11°25'3"N 78°13'18"E ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 245 மீட்டர் (805அடி) உயரத்தில் இருக்கின்றது.

பருவமழை[தொகு]

தென்கிழக்கு பருவமழையும், முக்கியமாக வடமேற்கு பருவமழையும் நகருக்கு மழை கொண்டு வருகிறது. சிங்களாந்தபுரத்தில் வெப்பமும் ஈரப்பதமும் வருடம் முழுவதும் மிகுந்து காணப்படுகிறது. ஏற்காடு சிங்களாந்தபுரத்திலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கொல்லிமலை சிங்களாந்தபுரத்திலிருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

கலாசாரம்[தொகு]

சிங்களாந்தபுரத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சிங்களாந்தபுரத்தின் கலாசாரம் விளங்குகிறது.அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் தமிழ் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது. ஊரின் சந்தைப்பேட்டையில் உள்ள நவகண்ட சிற்பம் 4 அடி உயரமுள்ளது. வலக்கை பாதி ஒடிந்த நிலையிலும், இடது கையால் கத்தியைக்கொண்டு அரிந்து கொள்வது போலவும் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

சிங்களாந்தபுரம் நகரிலிருந்து மற்ற நகரங்களுக்கு சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன. சிங்களாந்தபுரத்துக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது

தொலைபேசி நிறுவனங்கள்[தொகு]

இங்கு பி.எஸ்.என்.எல், டாடா இண்டிகாம், ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு அளிக்கின்றன. மற்ற இந்திய நகரங்களைப் போல சிங்களாந்தபுரத்திலும் கிரிக்கெட்டே பிரபலமான விளையாட்டாகும்.

பள்ளி௧ள்[தொகு]

  • அரசினர் மேல்நிலை பள்ளி, சிங்களாந்தபுரம்
  • ஊராட்சி தொடக்௧ பள்ளி, சிங்களாந்தபுரம்
  • நேசனல் மெட்ரிகுலேசன் பள்ளி, சிங்களாந்தபுரம்

அலுவலகங்கள்[தொகு]

  • ஊராட்சி அலுவலகம்
  • தமிழ்நாடு மின்வாரியதுறை, உதவிபொறியாளர், அலுவலகம்
  • அஞ்சல் அலுவலகம்

கோவில்கள்[தொகு]

திருவேசுவரர் ஆலயம்
திருவேசுவரர் ஆலயத்தில் உள்ள நந்தியின் முன் உள்ள வல்வில் ஓரி சிலை
  • பெரிய மாரியம்மன் கோவில்
  • சின்ன மாரியம்மன் கோவில்
தேவேந்திர குல வேளாளருக்கு பாத்தியப்பட்டது 
  • அம்மன் கோவில்
  • காளி அம்மன் கோவில்
  • திருவேசுவரர் கோவில்
  • கற்புரநாரயணன் கோவில்
  • அண்ணமார் கோவில்
  • வேட்டைகாரசாமி கோவில்
  • பெரியசாமி கோவில்
  • பச்சையம்மன் கோவில்
  • கருப்பண்ணசாமி கோவில்
  • எட்டுக்கை அம்மன் கோவில்
  • பிள்ளையார் கோவில்
  • செளடேசுவரி அம்மன் கோவில்
  • அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில்

வங்கிகள்[தொகு]

  • கார்பரேசன் வங்கி (தொலைபேசி: 04287-253426, 222857)
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. http://census2001.tn.nic.in/pca2001.aspxRural[தொடர்பிழந்த இணைப்பு] - - Namakkal District;Rasipuram Taluk;Singalandapuram Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்களாந்தபுரம்&oldid=3771958" இலிருந்து மீள்விக்கப்பட்டது