உள்ளடக்கத்துக்குச் செல்

சார் மணி

ஆள்கூறுகள்: 55°45′03″N 37°37′06″E / 55.75083°N 37.61833°E / 55.75083; 37.61833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார் மணி
Tsar Bell
Царь–колокол
ஆள்கூறுகள்55°45′03″N 37°37′06″E / 55.75083°N 37.61833°E / 55.75083; 37.61833
இடம்மாஸ்கோ, ரஷ்யா
வடிவமைப்பாளர்ஐவன் மோடோரின்
வகைகோபுர மணி
கட்டுமானப் பொருள்வெண்கலம்
அகலம்6.6 மீட்டர்கள் (22 அடி)
உயரம்6.14 மீட்டர்கள் (20.1 அடி)
துவங்கிய நாள்1733
முடிவுற்ற நாள்1735

சார் மணி அல்லது ஜார் மணி (tsar-kolokol, சார் கொலோகோல்) (Tsar Bell) உலகின் மிகப் பெரிய மணி ஆகும்.[1] இந்த மணி உடைந்த நிலையில் காணப்படுகிறது. சார் மணி ரஷ்யாவின் தலைநகராகிய மாஸ்கோவிலுள்ள ரஷ்ய அதிபரின் உத்தியோகபூர்வ இடமான கிரெம்லினில் அமைந்துள்ளது. இம்மணி 1733-35 ஆம் ஆண்டளவில், ஐவான் மெட்டோரின் மற்றும் அவர் மகன் மிகெயில் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. இந்த மணியானது மூன்று தடவைகள் புதுப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு புதுப்பிப்பின் போதும் அதிகளவில் உலோகங்கள் சேர்க்கப்பட்டன. இதன் நிறை 445,170 பவுண்ட் (201,924 கி.கி) ஆகும். இதன் உயரம் 6.14 மீட்டர் (20.1 அடி). இதன் விட்டம் 6.6 மீட்டர் ஆகும். இந்த மணியினை இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வடிவமைத்ததனர்.

1737 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தின் காரணமாக இம்மணியில் ஒரு துண்டு உடைந்தது. இந்த உடைந்த துண்டின் எடை 11.5 தொன்களாகும். இந்தக் காரணத்தால் இம்மணி ஒலிப்பதில்லை.

மணியின் கலைநயம்

[தொகு]

ஐரோப்பிய கலைவடிவில் உருவான இம்மணியின் வெளிப்புறத்தில் இயேசு கிறிஸ்து, மேரி மாதா, திருமுழுக்கு யோவான், புனிதர்கள், அரசவை குருமார்களின் மற்றும் தேவதைகளின் உருவங்களும், அழகிய கொடிகளும் செதுக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை

[தொகு]
  1. Slobodskoy, Archpriest Seraphim (1996), "Bells and Russian Orthodox Peals", The Law of God, Jordanville, N.Y.: Holy Trinity Monastery, p. 624, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88465-044-8

இதனையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சார் மணி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்_மணி&oldid=4041113" இலிருந்து மீள்விக்கப்பட்டது