சார் மணி
சார் மணி Tsar Bell Царь–колокол | |
---|---|
![]() | |
ஆள்கூறுகள் | 55°45′03″N 37°37′06″E / 55.75083°N 37.61833°Eஆள்கூறுகள்: 55°45′03″N 37°37′06″E / 55.75083°N 37.61833°E |
இடம் | மாஸ்கோ, ரஷ்யா |
வடிவமைப்பாளர் | ஐவன் மோடோரின் |
வகை | கோபுர மணி |
கட்டுமானப் பொருள் | வெண்கலம் |
அகலம் | 6.6 மீட்டர்கள் (22 ft) |
உயரம் | 6.14 மீட்டர்கள் (20.1 ft) |
துவங்கிய நாள் | 1733 |
முடிவுற்ற நாள் | 1735 |
சார் மணி அல்லது ஜார் மணி (tsar-kolokol, சார் கொலோகோல்) (Tsar Bell) உலகின் மிகப் பெரிய மணி.[1] இந்த மணி உடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. சார் மணி ரஷ்யாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள ரஷ்ய அதிபரின் உத்தியோகபூர்வ இடமான கிரெம்லினில் அமைந்துள்ளது. இம்மணி 1733-35 ஆம் ஆண்டளவில் ஐவான் மெட்டோரின் மற்றும் அவர் மகன் மிகெயில் ஆகியவர்களால் வடிவமைக்கப்பட்டது. இந்த மணியானது மூன்று தடவைகள் புதுப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு தடவையின்போதும் அதிகளவில் உலோகங்கள் சேர்க்கப்பட்டன. இதன் நிறை 445,170 பவுண்ட் (201,924 கி.கி) ஆகும். இதன் உயரம் 6.14 மீட்டர் (20.1 அடி). அத்துடன் அதன் விட்டம் 6.6 மீட்டர்கள் ஆகும். இந்த மணியினை 200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வடிவமைத்ததனர்.
1737 ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தின் காரணமாகவே இம்மணியில் ஒரு துண்டு உடைந்தது. இந்த உடைந்த துண்டின் எடை 11.5 தொன்களாகும். இதன் காரணத்தினால் இம்மணியானது ஒலிப்பதில்லை.
மணியின் கலைநயம்[தொகு]
ஐரோப்பிய கலைவடிவில் உருவான் இம்மணியின் வெளிப்புறத்தில் இயேசு கிறித்து, மேரி மாதா, திருமுழுக்கு யோவான், புனிதர்கள், அரசவை குருமார்களின் மற்றும் தேவதைகளின் உருவங்களும், அழகிய கொடிகளும் செதுக்கப்பட்டுள்ளது.
உசாத்துணை[தொகு]
- ↑ Slobodskoy, Archpriest Seraphim (1996), "Bells and Russian Orthodox Peals", The Law of God, Jordanville, N.Y.: Holy Trinity Monastery, p. 624, ISBN 0-88465-044-8