உள்ளடக்கத்துக்குச் செல்

சாரணர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாரணர் என்போர் சாரணியத்தில் ஈடுபடும் ஆண் அல்லது பெண் ஆவர். இவர்கள் பொதுவாக 10 தொடக்கம் 18 வயதுப் பிரிவினராகவே காணப்படுவர். வயதின் அடிப்படையில் கனிஷ்ட, சிரேஷ்ட எனும் இரு வகையாக இவர்கள் வகைப்படுத்தப்படுகின்றனர். 20 முதல் 40 வரையான சாரணர்களை உள்ளடக்கிய குழு, துருப்பு (Troop) எனவும் அத்துருப்புக்களில் 6 தொடக்கம் 8 வரையான உறுப்பினர்களைக் கொண்ட பிரிவு அணி எனவும் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு துருப்பிலும் சாரணத் தலைவர்கள் காணப்படுவர். சாரண செயற்பாடுகள் துருப்பு அல்லது அணி ரீதியாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

சாரணர்கள் பொதுவாக, சாரணர், கடற்காரணர் வான் சாரணர் என மூன்று வகைப்படுத்தப்படுகின்றனர். சாரணர்களின் இயக்கம் 1907இல் பேடன் பவல் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.[1][2][3][4]

உதவும் துறவிகள்

[தொகு]
  • சாரணன் ஒருவன் நிலம், நீர், வானம் ஆகிய எங்கும் இயங்க வல்லவர் என்று மணிமேகலை குறிப்பிடுகிறது.[5] இந்தச் சாரணன் சோழ வேந்தன் நெடுமுடிக் கிள்ளிக்கு உதவியிருக்கிறான்.
  • சாரணர் நல்ல அறிவுரைகளை வழங்குவர் என்று கவுந்தி அடிகள் குறிப்பிடுகிறார்.[6][7]
  • சாரணர் அறநெறிகளைக் கூறுபவர்.[8]
  • கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரும் திருவரங்கத்தில் தங்கியிருந்தபோது "பண்டைய வினைகள் நீங்கி நலம் பெறுவாயாக" என்று கவுந்தி அடிகளையே வாழ்த்தும் அளவுக்குச் சாரணர் சிறப்புப் பெற்றவர்கள். அவர்கள் சமண முனிவர் கூறிய நோன்பிலிருந்து பிறழாதவர்கள்.[9]
  • புகார் நகரத்து விழாக்காலங்களில் சாரணர் வருவர். அங்கு உலக நோன்பிகள் இட்டு வைத்திருக்கும் சிலாதலம் என்னும் இருப்பிடத்தில் தங்கிச் செல்வது வழக்கம்.[10]
  • 18 தேவ கணங்களில் ஒருவர் சாரணர் என்று "மூவறு கணங்கள்" என வரும் சிலப்பதிகாரத் தொடருக்கு உரை எழுதும் பழைய உரை ஒன்று சாரணரை ஒரு கணத்தவர் என்று குறிப்பிடுகிறது.[11][12]
  • நாகமலைத் தீவில் சாரணர் திரிந்த செய்தியையும் மணிமேகலை நூல் குறிப்பிஇடுகிறது.[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Woolgar, Brian; La Riviere, Sheila (2002). Why Brownsea? The Beginnings of Scouting. Brownsea Island Scout and Guide Management Committee.
  2. Boehmer, Elleke (2004). Notes to 2004 edition of Scouting for Boys. ஆக்சுபோர்டு: Oxford University Press.
  3. "What is Boy Scouting? Purpose of the BSA". Boy Scouts of America. Archived from the original on 27 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 27 July 2006.
  4. "About Our World". The Scout Association. Archived from the original on 3 ஜூலை 2006. பார்க்கப்பட்ட நாள் 27 July 2006. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. நிலத்தில் குளித்து நெடுவிசும்பு ஏறிச்
    சலத்தில் திரியும்ஓர் சாரணன் தோன்ற - மணிமேகலை 24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை .
  6. சாரணர் கூறிய தகைசால் நல்மொழி - சிலப்பதிகாரம் - அடைக்கலக் காதை
  7. அந்தில் அரங்கத்து அகன் பொழில் அகவயின் \ சாரணர் கூறிய தகைசால் நல் மொழி - சிலப்பதிகாரம் காடுகாண் காதை
  8. தருமம் சாற்றும் சாரணர்-தம் முன் - - சிலப்பதிகாரம் - அடைக்கலக் காதை
  9. இலங்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி, பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத் தருமம் சாற்றும் சாரணர் தோன்ற- ‘பண்டைத் தொல் வினை பாறுக, என்றே கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர் - சிலப்பதிகாரம் - நாடுகாண் காதை
  10. ஐ-வகை நின்ற அருகத்தானத்துச் சந்தி ஐந்தும் தம்முடன் கூடி வந்து, தலைமயங்கிய வான் பெரு மன்றத்து, பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல், நீர் அணி விழவினும், நெடுந் தேர் விழவினும், சாரணர் வரூஉம் தகுதி உண்டாம் என, உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகு ஒளிச் சிலாதலம் - சிலப்பதிகாரம் - நாடுகாண் காதை
  11. சிலப்பதிகாரம் - இந்திர விழவு ஊர் எடுத்த காதை
  12. தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர்; இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாராகணம், ஆகாசவாசிகள், போக பூமியோர் என்னு மிவர்;
  13. நக்க சாரணர் நயம்இலர் தோன்றிப் \ பக்கம் சேர்ந்து பரிபுலம் பினன்இவன் \ தானே தமியன் வந்தனன் அளியன் \ ஊன்உடை இவ்வுடம்பு உணவுஎன்று எழுப்பலும், 60 - மணிமேகலை - 16 ஆதிரை பிச்சை இட்ட காதை

இவற்றையும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரணர்&oldid=3954797" இலிருந்து மீள்விக்கப்பட்டது