உள்ளடக்கத்துக்குச் செல்

சாரணர் கைகுலுக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாரணர் கைகுலுக்கல் (Scout handshake) என்பது சக சாரணர்களை வாழ்த்துவதற்கான ஒரு முறையான வழியாகும்.மேலும், உலகெங்கிலும் உள்ள சாரணர் மற்றும் வழிகாட்டி அமைப்புகளின் உறுப்பினர்களால் பயன்படுத்தப்படுகிறது. கைகுலுக்கல் இதயத்திற்கு அருகில் உள்ள கையால் செய்யப்படுகிறது மற்றும் நட்பின் அடையாளமாக வழங்கப்படுகிறது. பெரும்பாலான சூழ்நிலைகளில், கைகுலுக்கல் விரல்களை இணைக்காமல் உறுதியாக செய்யப்படுகிறது, மேலும் இருவரும் சீருடையில் இருக்கும்போது மட்டுமே இந்த கைகுலுக்கல் முறையினைப் பயன்படுத்துகின்றனர். தேசிய சாரணர் அமைப்புகள் சில பிரிவுகளுக்கு இடையே கைகுலுக்கலில் சில வேறுபாடுகள் உள்ளன. [1]

1935 சாரணர் கையேடு பின்வருமாறு கூறுகிறது, "உலகம் முழுவதிலும் உள்ள சாரண தலைவர்களின் உடன்படிக்கையின்படி, சாரணர்கள் சக சாரணர்களை இடது கை கைகுலுக்கலுடன் வரவேற்கிறார்கள்."

அணைத்துலக பெண் வழிகாட்டி , சாரண சங்க உறுப்பினர்களும் இடது கைகுலுக்கலைப் பகிர்ந்து கொள்கிறார்கள், மற்ற பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களை சந்திக்கும் போது, வலது கையால் செய்யப்பட்ட சாரணிய அடையாளத்துடன் இது பயன்படுத்தப்படலாம். [2]

விளக்கம்

[தொகு]

அசாந்தி வீரர் ஒருவர் பேடன் பவுலின் வீரம் குறித்து அறிந்திருந்தபடியால் அவரிடம் இடதுகையினை கைகுலுக்க முன்வந்தார் ஏனெனில் அவ்வாறு செய்ய நாம் நமது கேடயங்களையும் நமது பாதுகாப்பையும் கைவிட்டு அவர்களது மேல் நம்பிக்கை வைத்து கொடுக்கப்படுகிறது. துணிச்சலானவர்களிடம் இடதுகை குலுக்குவது முறை எனக் கருதப்படுகிறது. [1]

இடது கை இதயத்திற்கு நெருக்கமாக உள்ளது அந்த அடையாளத்திற்காகவும் கொடுக்கப்படுவதாக கருத்து உள்ளது. [2]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 Der Wolf, der nie schläft: Das abenteuerliche Leben des Lord Baden Powell. Herder. 1985.
  2. 2.0 2.1 Foster, Michael (1999). "The Origins of the Left Handshake". Scout History Association. பார்க்கப்பட்ட நாள் 2019-02-15.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரணர்_கைகுலுக்கல்&oldid=3784927" இலிருந்து மீள்விக்கப்பட்டது